தென்காசி டூ திருநெல்வேலி.. சிங்கம் சிங்கிளா வந்துருச்சு.. "தம்பிகள்" பிரம்மிப்பு

post-img

சென்னை: வரப்போகும் எம்பி தேர்தலுக்கு, தமிழக அரசியல் கட்சிகள் இன்னும் தயாராகாத நிலையில், இதில் சீமான் மட்டும் முதல் நபராக பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார்.

கடந்த 2019 எம்பி தேர்தலின்போதே, 8 சதவீதம் வாக்குகளை பெற்று, தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் எண்ணமாக இருந்தது. ஆனால், வெறும் 4 சதவிகித வாக்குகளை மட்டுமே அப்போது பெற முடிந்தது.

காரணம், கமல்ஹாசன் தனியாக கட்சி ஆரம்பித்து அப்போதுதான் முதல் தேர்தலையும் சந்தித்திருந்தார்.. அவரும் 4 சதவிகித வாக்குகளை அப்போது பெற்றிருந்தார்.. நாம் தமிழருக்கு வந்திருக்க வேண்டிய ஓட்டுக்கள் கமலுக்கு சென்றுவிட்டதாக, அரசியல் விமர்சகர்கள் கருத்து சொன்னார்கள்.

சாத்தியமா?: அதற்கு பிறகு, சட்டசபை தேர்தலில், மய்யத்துடன் சேர்ந்து நாம் தமிழர் கட்சி போட்டியிட போவதாக பேச்சுக்கள் கிளம்பின.. அப்படி 2 பேரும் கூட்டணி வைத்தால், அதிமுக, திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களுடன், இவர்கள் 2 பேரின் வாக்குகளும் சேர்ந்து, ஒட்டுமொத்தமாக ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கும் என்றும் நம்பப்பட்டது.. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை..

"சிங்கம் தனியாகத்தான் வேட்டையாடும்... ஆனால், நாய், ஓநாய், பன்றிகள்தான் கூட்டமாக வேட்டையாடும்" என்று ஒவ்வொரு தேர்தலின்போதும் சொல்லி கொண்டே வருகிறார் சீமான்.. அதேபோல, தனித்துதான் எம்பி தேர்தலில் களமிறங்கினார்.. உள்ளாட்சி மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் உட்பட அனைத்திலும் தனித்தே களமிறங்கினார்.. இப்போதும் தனித்தே களமிறங்க போகிறார்.

கமல் - சீமான்: அதேபோல, பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் தருவது என்பது நாம் தமிழர் கட்சியின் சிறந்த கொள்கையாக இருந்து வருகிறது.. இதை கமலும் செய்கிறார் என்றாலும், சீமான் முன்னோடியாகவே உள்ளார்..

கடந்த எம்பி தேர்தலின்போது 40 தொகுதிகளிலும் இதுபோலவே தனித்து போட்டியிட்டு, 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் நிறுத்தினார்.. திமுக, அதிமுக என பாரம்பரிய மிக்க கட்சிகள்கூட, இப்படி ஒரு சாதனையை செய்யாதபோது, ஆண்-பெண் வேட்பாளர்களுக்கு சரிசமமாக வாய்ப்பு தருகிறாரே சீமான் என்று இளைஞர்கள் பலரும் உற்றுக்கவனிக்கவே செய்தனர்.

ஆண் - பெண் வேட்பாளர்: ஒவ்வொரு முறையும் தனித்து போட்டியிட்டு, மலைபோன்ற கட்சிகளுடன் மோதி வரும் சீமானின் தைரியம் பேசப்பட்டு வருவதுடன், ஆண் வேட்பாளர்களுக்கு நிகராக பெண் வேட்பாளர்களையும் சீமான் நிறுத்தி வருவது அவரது துணிச்சலையே வெளிப்படுத்தி வருவதாகவும் கருதப்படுகிறது..

அதுமட்டுமல்ல, எம்பி தேர்தலின்போது, ஆண் வேட்பாளர்களைவிடவும் பெண் வேட்பாளர்கள் தான் பெரிதும் பேசப்பட்டனர்.. மக்களையும் இவர்கள் வெகு எளிதாக கவர்ந்தனர்.. அந்த வகையில் இந்த முறையும் பெண் வேட்பாளர்கள் களமிறக்க முடிவு செய்திருக்கிறார்.. அதில் முதல் வேட்பாளரையும் தற்போது அறிவித்துவிட்டார்.

2 தொகுதிகள்: நெல்லை, தென்காசி பாராளுமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பெயர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது... நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா. சத்யாவும், தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மயிலை ராஜனும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு, தென்சென்னை தொகுதியில் பேராசிரியர் தமிழ்ச்செல்வி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, நெல்லை, தென்காசி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்கு வங்கி: ஆக, இதுவரை தனித்து தேர்தல்களை சந்தித்து வந்தாலும், இதுவரை நாம் தமிழர் கட்சி ஒருமுறைகூட வெற்றி பெற்றதில்லை.. அதேசமயம், தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் காங்கிரசின் தோல்விக்கு இந்த கட்சி காரணமாக இருந்துள்ளதையும் மறுக்க முடியாது.. அதேபோல, திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை பிடித்திருப்பதையும் மறுக்க முடியாது.

அந்தவகையில், வரப்போகும் தேர்தலிலாவது, வாக்கு சதவிதத்தை வழக்கம்போல் அதிகரிப்பதுடன், வெற்றிக்கனியையும் எப்படியாவது பறித்துவிட வேண்டும் என்ற தீவிரத்தில் இறங்கிவிட்டார்களாம் சீமானின் தம்பிகள்.. பொறுத்திருந்து பார்ப்போம்.!!

Related Post