இந்தியாவின் சவாலுக்கு நாங்கள் தயார்.. பாபர் அசாம் பேட்டி

post-img

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் நேபாளத்தை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான அணி அடுத்தது வரும் இரண்டாம் தேதி இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.

இந்த போட்டியில் பாபர் அசாம் 131 பந்துகளை எதிர் கொண்டு 151 ரன்கள் விளாசினார். இந்த நிலையில் போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாபர் அசாம் இந்தியாவை எதிர்கொள்வதற்கு முன்பு இது போன்ற போட்டி எங்களுக்கு நல்ல பயிற்சி களமாக அமைந்துள்ளது.

இதன் மூலம் எங்களுடைய அணி வீரர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. நாங்கள் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் 100% எங்களுடைய பங்களிப்பை கொடுப்போம். இந்தியாவுக்கு எதிராகவும் இதே போல் செயல்படுவோம் என நம்புகிறேன். இந்தியாவின் சவாலுக்கு தயாராக இருக்கிறோம் என்று பாபர் அசாம் கூறினார். மேலும் பேசிய வர் நேபாளத்துக்கு எதிராக முதலில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள்.

அதற்கு காரணம் பந்து பேட்டிற்கு சரியாக வரவில்லை. எனவே நானும் ரிஸ்வானும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முற்பட்டோம். சில சமயம் ரிஸ்வான் எனக்கு நம்பிக்கை கொடுப்பார். சிலமுறை நான் அவருக்கு நம்பிக்கை அளிப்பேன். இந்த போட்டியில் இப்திகார் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்துள்ளார். நான் அவரிடம் உங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று கூறினேன்.

அவர் இரண்டு மூன்று பவுண்டரிகள் அடித்த பிறகு களத்தில் இயல்பாக இருந்தார். எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்களும் வேகப்பந்துவீச்சாளர்களும் நன்றாக பந்து வீசினார்கள் என்று பாபர் அசாம் கூறினார். ஆசிய கோப்பையில் எந்த பயிற்சி ஆட்டமும் எதுவுமே இல்லாமல் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியிலே பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

ஆனால் பாகிஸ்தான அணி நேபாளத்தை எதிர்கொண்டு பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல பயிற்சியை எடுத்து விட்டது. இது பாகிஸ்தானுக்கு சாதகமான சூழலாக அமைந்துவிட்டது. இதனால் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் போன்ற பலம் வாய்ந்த அணியை இந்தியா எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இது மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது.

Related Post