மதுரை கள்ளழகர் கோயிலில் சிவகார்த்திகேயன்.. கருப்பணசாமிக்கு கொடுத்த காணிக்கை.. என்ன தெரியுமா?

post-img

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள ஶ்ரீ கள்ளழகர் திருக்கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். அப்போது பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதிக்குச் சென்று சுவாமிக்கு அரிவாள் காணிக்கையாக வழங்கினார்.
தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் இவரது வளர்ச்சி என்பது ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் கடைசி படமான அமரன் திரைப்படம் 350 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

அமரனுக்கு முன்பு வெளியான அயலான், மாவீரன் ஆகிய திரைப்படங்கள் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வசூலைக் குவித்தன. அதே நேரத்தில், காமெடி, கமர்சியல் படங்கள்போல அல்லாமல் அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் முற்றிலும் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். சாய் பல்லவியுடனான காதல் காட்சி, ராணுவத்தில் சண்டையிடும் காட்சி என அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அமரன் படத்துக்குப் பிறகு அதிக அளவிலான ரசிகர்கள் பட்டாளத்தை தனக்கென உருவாக்கிய சிவகார்த்திகேயன், அடுத்த படங்களில் நடிக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். முருகதாஸின் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மேலூர் அருகே உள்ள ஶ்ரீ கள்ளழகர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியுடன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது புகழ்பெற்றத் திருத்தலமான ஸ்ரீ கள்ளழகர் திருக்கோயில். இக்கோயிலில், தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் இன்று தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர், ஸ்ரீ கள்ளழகர் கோயிலில் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
அழகர் கோயிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதிக்குச் சென்று சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, சிவகார்த்திகேயன் கருப்பணசாமி கோயிலுக்கு அரிவாள் ஒன்றை காணிக்கையாகச் செலுத்தினார். கோயில் நிர்வாகத்தினர் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து அவருக்குப் பிரசாதம் வழங்கினர்.
சிவகார்த்திகேயன் கோயிலுக்கு வந்ததையடுத்து, அங்கு பொதுமக்கள் திரளானோர் குவியத் தொடங்கினர். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்போன்களில் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Related Post