பொது சிவில் சட்டம் குறித்து பட்டம் பெற்ற 3 ,033 இஸ்லாமிய பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இச்சட்டம் குறித்து அவர்களின் கருத்துக்களை இங்கே பார்க்கலாம்.
திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்கு ஒரே மாதிரியான சட்டத்தை ஆதரிக்கிறீர்களா? என கேள்விக்கு ஆம் என 68.4% பேரும், இல்லை என 27% பேரும் கூறியுள்ளனர். தெரியாது /கருத்து கூறவில்லை என 4.6% பட்டதாரி இஸ்லாம் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
நான்கு பெண்கள் வரை திருமணம் செய்யும் உரிமை முஸ்லீம் ஆண்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என கேள்விக்கு ஆம் என 16.2% பேரும், இல்லை என 78.6% பேரும், தெரியாது /கருத்து கூறவில்லை என 5.2% பேரும் தெரிவித்துள்ளனர்.
சொத்துக்களுக்கான வாரிசு உரிமையில் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு ஆம் என 85.7%, இல்லை என 18.3%, தெரியாது /கருத்து கூறவில்லை என 4% கூறியுள்ளனர்.
விவாகரத்து பெற்ற தம்பதிகள் எந்த கட்டுப்பாடும் இன்றி மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டுமா? என்ற வினாவிற்கு ஆம் என 79% பேர் பதிலளித்துள்ளனர். இல்லை என 15.6% பேரும் தெரியாது /கருத்து கூறவில்லை என 5.4% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதம் எதுவாக இருந்தாலும் தத்தெடுப்பு அனுமதிக்கப்பட வேண்டுமா? என்ற நியூஸ் 18 தொலைக்காட்சியின் கேள்விக்கு ஆம் என 69.5% பேரும் இல்லை என 20.5% பேரும் தெரிவித்துள்ளனர். 10% பேர் கருத்து தெரிவிக்கவில்லை.
வயது முதிர்ந்த அனைத்து இந்தியர்களும் தங்கள் சொத்துக்களை அவர்கள் விரும்பியபடி உயில் எழுத உரிமை தர வேண்டுமா? என்று தொடுத்த வினாவிற்கு ஆம் என 73.1% பேர் இல்லை என 15.6% பேர் தெரியாது /கருத்து கூறவில்லை என 11.3% பேர் பதில் கூறியுள்ளனர்.
அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் சட்டபூர்வ திருமண வயது 21 என்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்ற வினாவிற்கு ஆம் என 82.4% பேரும் இல்லை என 14.3% பேரும் தெரிவித்துள்ளனர். தெரியாது /கருத்து கூறவில்லை என 3.3% பேர் கூறியுள்ளர்.