புத்தாண்டு 2025: செவ்வாய் வக்கிரப் பெயர்ச்சியால் பணக்காரர் ஆகப்போகும் ராசிகள்.. வியாபாரம், தொழிலில் உச்சம்

post-img
புத்தாண்டு பலன் 2025: புத்தாண்டில் வக்கிரப் பெயர்ச்சியாகும் செவ்வாய் கிரகத்தால் அனைத்து ராசிகளிலும் பலவிதமான தாக்கங்கள் ஏற்படும். குறிப்பிட்ட ராசிகளுக்கு யோகத்தையும் இந்தப் புத்தாண்டு அள்ளிக் கொடுக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் செவ்வாய் பகவானால் நற்பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. (Sevvai vakra peyarchi) மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியாக விளங்குபவர் செவ்வாய் பகவான். நவக்கிரகங்களில் செவ்வாய் பகவான் கோபத்தின் காரகன் என்று அழைக்கப்படுகிறார். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, தைரியம், வீரம், மனவலிமை, விடாமுயற்சி உள்ளிட்டவற்றுக்கு காரணகர்த்தாவாக உள்ளார். 45 நாட்களுக்கு ஒருமுறை செவ்வாய் பகவான் தனது இடத்தை மாற்றுவது வழக்கம். இந்த செவ்வாயின் மாற்றம் அனைத்து ராசிகளிலும் மிகப்பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும். (Mars Vakra peyarchi) அந்த வகையில், 2025 புத்தாண்டில் முக்கியமான கிரகங்கள் அனைத்தும் இடப்பெயர்ச்சி ஆகின்றன. இதனால், ஒரு சில ராசிக்காரர்கள் பாதிப்புகளையும், ஒரு சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டங்களையும் பெறுவா். கடக ராசியில் பயணித்து வரும் செவ்வாய் பகவான் தற்போது வக்கிர நிலையில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் வக்கிர நிலையில் மிதுன ராசிக்குச் செல்கிறார். செவ்வாயின் இந்த வக்கிரப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. எந்தெந்த ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறவுள்ளனர் என்று தெரிந்து கொள்ளலாம். (lucky zodiac signs 2025) மேஷம் (New year rasi palan for mesham): 2025 புத்தாண்டில் ஜனவரி மாதத்தின் தொடக்கத்திலேயே செவ்வாய் பகவான் உங்களுடைய ராசியின் மூன்றாம் வீட்டில் வக்கிர நிலையில் பயணிப்பதால் எடுத்த காரியங்களை தைரியமாகச் செய்து முடித்து அதிலும் வெற்றியையும் காண்பீர்கள். தைரியம், மன வலிமை, விடாமுயற்சி அதிகரிக்கும். இதுவரை தடைபட்டு வந்த அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு உண்டாகும். பொருளாதார சூழ்நிலை மேம்படும். செய்யும் காரியங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு பெருகும். வெளிநாடுகளில் வேலை செய்வோருக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி பெருகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். துலாம் (New year rasi palan for thulam): துலாம் ராசிக்காரர்களின் ஒன்பதாம் வீட்டில் வக்கிரப் பெயர்ச்சியாகிறார் செவ்வாய் பகவான். ஜனவரி மாதம் வக்கிர நிலையில் பயணம் செய்யும் செவ்வாய் பகவானால் அலுவலகங்களில் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான சூழல் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரம், தொழிலில் இரட்டிப்பு லாபம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பாந நிலை ஏற்படும்ய எடுத்த காரியங்களை திறமையாகச் செய்து முடித்து வெற்றிக் கனியை பறிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றம் தரும். உயர் பதவியில் இருப்பவர்களுக்கு யோகம் உண்டு. மனைவியின் ஆதரவு பெருகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் மேம்படும். திடீர் பண வரவு உண்டாகும். சிம்மம் (New year rasi palan for simmam): சிம்ம ராசிக்காரர்களின் பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் பகவான் புத்தாண்டின் ஜனவரி மாதத்தில் வக்கிர நிலையில் பயணம் செய்யவுள்ளார். நல்ல செய்திகள் உங்களுடைய வீடு தேடி வரும். வருமானம், திடீர் பணவரவால் மகிழ்ச்சி பொங்கும். பணம் அதிகமாக சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சமூகத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் லாபம் பெருகும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவியின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் பொங்கும். திருமண வரன்களுக்காக காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். வேலை இல்லாமல் தவித்து வந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வெற்றியும் உண்டாகும். இதுவரை குடும்பத்தில் ஏற்பட்டு வந்த அனைத்து பிரச்னைகளும், சிக்கல்களும் தீரும். உடன் பிறந்தவர்களின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

Related Post