ஓட்டு எண்ணிக்கை நடக்கும்போதே இப்படியா? தெலுங்கானா டிஜிபியை சஸ்பெண்ட் செய்த தேர்தல் ஆணையம்

post-img

ஹைதராபாத்: தெலுங்கானாவில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக அம்மாநில டிஜிபி அஞ்சனி குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவில் 119 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 71 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இங்கு தனித்து ஆட்சியமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பிஆர்எஸ் கட்சி 40 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும், மற்றவர்கள் 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் தனித்து ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.
3 ஹீரோ.. தெலங்கானா காங்கிரஸ் வெற்றிக்கு இவங்க தான் காரணம்! அட தமிழக எம்பி இருக்காரே! செய்தது என்ன
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி 60க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும்போதே தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமார் தெலுங்கானா மாநில போலீஸ் நோடல் அதிகாரி (செலவு) சஞ்சய் ஜெயினுடன் சேர்ந்து காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டியை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார். அதோடு ரேவந்த் ரெட்டிக்கு, டிஜிபி அஞ்சனி குமார் பூங்கொத்து கொடுத்தார்.
இந்த வேளையில் டிஜிபி அஞ்சன் குமாருடன் இது தேர்தல் விதிமுறையாகும். இந்நிலையில் தான் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கூறி தெலுங்கானா டிஜிபி அஞ்சன் குமாரை சஸ்பெண்ட் செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

 

Related Post