12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் முக்கிய கிரகங்களின் அமைப்புகள் தெரியுமா?.. நோட் பண்ணுங்க

post-img
சென்னை: 2025 புத்தாண்டு மிக விரைவில் பிறக்கப் போகிறது. 2025 எப்படி இருக்கும் என்று அனைத்து ராசிகளுமே எதிர்பார்ப்பில் இருப்பார்கள். பொது பலன்கள் அனைத்து ராசிகளுக்கும் அடிப்படை பலன்களை தரும். மற்றபடி ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிட்ட சில கிரகங்கள் தான் யோகங்களை தரும். அந்த வகையில் 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய கிரகங்கள் எவை என்று இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்... மேஷம்: மேஷம் ராசிக்கு அதிபதி செவ்வாய் ஆகும். மேஷத்துக்கு சூரியன், செவ்வாய் மற்றும் குரு ஆகிய கிரகங்கள் யோக பலன்ககளை அள்ளிக் கொடுக்கும். சூரியன், செவ்வாய் மற்றும் குரு ஆகிய மூன்றுமே ராஜ கிரகங்கள். அதனால் ராஜயோகம் கிடைக்கும். ஆளுமைத்தன்மையால் பிறரை வேலை வாங்கும் இடத்தில் இருப்பார்கள். செய்யும் காரியங்களில் துணிச்சல் நிறைந்திருக்கும். அதேநேரத்தில் மேஷத்துக்கு புதன், சுக்கிரன் மற்றும் சனி கிரகங்களின் அமைப்பு பின்னடைவை ஏற்படுத்தும். இந்த கிரகங்களின் திசை வரும்போது உரிய பரிகாரம் செய்து கொள்வது நல்லது. ரிஷபம்: ரிஷப ராசிக்கு சூரியன், புதன், சனி ஆகிய கிரகங்களால் யோகம் உண்டாகும். சனியால் அதிக பலன்கள் கிடைக்கும். ஒன்பதாம் இடமான உயர் திரிகோண ஸ்தானம், பத்தாம் இடமான உயர் கேந்திர ஸ்தானத்துக்கும் சனி அதிபதியாவார். இதனால் பணம், பதவி, அந்தஸ்து உள்பட சகல யோகங்களும் பெறுவார்கள். சனியுடன், புதன் இணைந்திருப்பது கூடுதல் அதிர்ஷ்டங்களைத் தரும். அதேநேரத்தில் சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களால் பின்னடைவு ஏற்படும். மேற்கண்ட கிரகங்களின் திசை வரும்போது உரிய பரிகாரம் செய்து கொள்வது நல்லது. மிதுனம்: மிதுனம் ராசிக்கு புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களால் யோக பலன்கள் தாராளமாக கிடைக்கும். கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் தடம் பதிப்பார்கள். அதேநேரத்தில் சூரியன், செவ்வாய் மற்றும் குரு கிரகங்களால் பின்னடைவு ஏற்படும். இந்த கிரகங்களின் எதிசை வரும்போது உரிய பரிகாரம் செய்து கொள்வது நல்லது. கடகம்: கடகம் ராசிக்கு செவ்வாய், குரு மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களால் நிறைவான பலன்கள் கிடைக்கும். முக்கியமாக செவ்வாய் கிரகத்தால் அதிக பலன் உண்டாகும். செவ்வாய் வலுவடையும் நேரத்தில் சுப பலன்கள் உண்டாவது நிச்சயம். புதன், சுக்கிரன் மற்றும் சனி கிரகங்களால் பின்னடைவு ஏற்படும். இந்த கிரகங்கள் வலுபெறும் நேரத்தில் எச்சரிக்கையுடன் உரிய பரிகாரம் செய்ய வேண்டும். சிம்மம்: சிம்மம் ராசிக்கு செவ்வாய், சூரியன் மற்றும் குரு கிரகங்களால் யோகம் கிடைக்கும். செவ்வாய் கிரகத்தின் மூலம் அதிக பலன்கள் வரும். சூரியன், குரு ஆகிய கிரகங்கள் செவ்வாயுடன் பயணிக்கும்போது சுப பலன்கள் அதிகரிப்பதுடன் ராஜயோகம் உண்டாகும். சிம்மம் சூரியனின் வீடு என்பதால் அரசு உயர் பதவிகள் எளிதாக அமையும். ஆளுமை மிக்கவர்களாக வலம் வருவார்கள். புதன், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய கிரகங்களால் பின்னடைவு ஏற்படும். இந்த கிரகங்கள் வலுபெறும் போது பரிகாரம் செய்வது நல்லது. கன்னி: கன்னி ராசிக்கு புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்கள் யோக பலன்களை அள்ளி கொடுக்கும். வீடு, வாகனம், சொத்து அமைப்புகள் நன்றாக உள்ளன. அதேநேரத்தில் சந்திரன், செவ்வாய் மற்றும் குரு கிரகங்களால் பின்னடைவு ஏற்படும். அந்த காலத்தில் எச்சரிக்கையுடன் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். துலாம்: துலாம் ராசிக்கு சனி கிரகத்தால் அதிக பலன்கள் கிடைக்கும். சனி தசா புத்தி காலத்தில் யோகங்கள் கொட்டும். சூரியன், செவ்வாய் மற்றும் குரு ஆகிய கிரகங்களால் பின்னடைவு ஏற்படும். எனவே அந்த கிரகங்கள் வலுபெறும்போது உரிய பரிகாரம் செய்வது அவசியம். விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்கு சூரியன் மற்றும் சந்திரன் கிரகங்கள் யோக பலன்களை தருவார்கள். இந்த இரண்டு கிரகங்கள் சேரும்போது அதிர்ஷ்டம் அள்ளிக் கொடுக்கும். இந்த கிரகங்களுடன் குரு பகவான் சேர்ந்தால் சுப பலன்கள் அதிகரிக்கும். ஆளுமையால் உயர் அதிகாரப் பதவி அமைப்பு உள்ளது. புதன், சுக்கிரன் மற்றும் சனி கிரகங்களால் பின்னடைவு ஏற்படும். அந்த காலத்தில் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. தனுசு: தனுசு ராசிக்கு சூரியன், செவ்வாய், புதன் மற்றும குரு ஆகிய கிரகங்களால் அதிகளவு பலன்கள் கிடைக்கும். முக்கியமாக சூரியன் புதன் சேர்க்கை மற்றும் செவ்வாய் குரு சேர்க்கை நல்ல பயன்களை தரும். சூரியன் செவ்வாய் சேர்க்கையும் ராஜயோக பயன்களை தரும். சுக்கிரன் மற்றும் சனி கிரகங்களால் பின்னடைவு ஏற்படும். இந்த காலத்தில் விழிப்புடன் பரிகாரம் செய்வது முக்கியம். மகரம்: மகரம் ராசிக்கு சுக்கிரன் கிரகத்தால் அதிக பலன்கள் கிடைக்கும். சுக்கிரனுடன் புதன் சேரும்போது பாக்கியங்கள் அதிகம் கிடைக்கும். சந்திரன், செவ்வாய் மற்றும் குரு கிரகங்களால் பின்னடைவு ஏற்படும். அந்த கிரகங்கள் வலுபெறும் போது பரிகாரம் செய்ய வேண்டும். கும்பம்: கும்பம் ராசிக்கு சுக்கிரன் கிரகத்தால் அதிக பலன்கள் ஏற்படும். சுக்கிரனுடன் செவ்வாய் சேரும்போது அதிர்ஷ்டம் தேடி வரும். சந்திரன், செவ்வாய் மற்றும் குரு ஆகிய கிரகங்களால் பின்னடைவு ஏற்படும். அந்த காலத்தில் உரிய பரிகாரம் செய்வது அவசியம். மீனம்: மீனம் ராசிக்கு செவ்வாய், சந்திரன் மற்றும் குரு ஆகிய கிரகங்களால் அதிக யோகம் கிடைக்கும். செவ்வாய் குரு சேர்க்கை மற்றும் செவ்வாய், சந்திரன் சேர்க்கை ராஜயோக அமைப்பை தரும். அதேநேரத்தில் சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய கிரகங்களால் பின்னடைவு ஏற்படும். அந்த கிரகங்கள் வலுவடையும் காலத்தில் உரிய பரிகாரம் செய்வது அவசியம். மேற்கண்ட பலன்கள் அந்தந்த ராசிகளுக்கான பொதுவான அமைப்பு தான். உங்கள் லக்னம் மற்றும் ஜாதக அமைப்பில் மாற்றங்கள் இருக்கலாம். எனவே உங்களுக்கான உண்மையான முழு பலன்களை அறிந்துகொள்ள ஜாதகத்துடன் ஜோதிடரை அணுகலாம்.

Related Post