இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் உத்தரகண்ட்!

post-img
டேராடூன்: வரும் ஜன. மாதம் முதல் உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது. நமது நாட்டிலேயே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற சிறப்பை உத்தரகண்ட் பெறுகிறது. ஒருவர் எந்தவொரு மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு மற்றும் வாரிசு உரிமை ஆகியவற்றில் அனைவருக்கும் பொதுவான விதிகளைக் கொண்டிருப்பதே இதன் நோக்கமாகும். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது மாநிலத்தில் இந்த பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். அடுத்தாண்டு தொடக்கம் முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது. பொதுமக்களின் நலன், சமத்துவம், தனிப்பட்ட சட்டங்களை ஒழுங்குபடுத்துவது ஆகியவற்றில் அவர் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. பெர்சனல் சட்டங்கள் போன்ற சிக்கலான பிரச்சினையைச் சிறப்பாகக் கையாள்வதன் மூலம், சமூக நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் முதல்வர் தாமி ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். அவரது இந்த தொலைநோக்கு நடவடிக்கை உத்தரகண்ட் மாநிலத்தை ஒரு முன்னோடியாக மாநிலமாக நிலைநிறுத்துகிறது. மற்ற மாநிலங்களும் இந்த சட்டத்தை அமல்படுத்த ஊக்கமளிக்கிறது. பொது சிவில் சட்டத்தின் உள்ள முக்கியமா விஷயங்கள் குறித்து நாம் பார்க்கலாம்: அனைத்து சமூகங்களிலும் பலதரப்பட்ட திருமணம் தடை செய்யப்படுகிறது. முத்தலாக் (தலாக்-இ-பித்தாத்), குலா மற்றும் ஜிஹார் போன்ற சட்டத்திற்குப் புறம்பான விவாகரத்து முறைகள் தடை செய்யப்படுகிறது. இரு தரப்பினருடன் முறையாகச் சடங்குகளுடன் நடக்கும் திருணங்கள் மட்டுமே சட்டப்பூர்வ திருமணமாக அங்கீகரிக்கப்படும் தம்பதிகள் தங்கள் திருமணத்தைக் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யத் தவறினால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். லைவ்-இன் உறவுகளில் இருப்போரும் அது குறித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் சிறைத் தண்டனை எதிர்கொள்ள நேரிடும். மோசடி திருமணம், பலதரப்பட்ட திருமணங்களைத் தடுக்க திருமண பதிவுகளை அனைவரும் அணுகும் வகையில் வைக்கப்படும். அதேநேரம் கலப்பு திருமணம், மதம் மாறி திருமணம் செய்வோரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் சட்டப்பூர்வ பாதுகாவலர்களாக (legal guardians) தந்தை இருப்பார். தாய்மார்கள் கஸ்டோடியன் (custodians) இருப்பார்கள். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் கஸ்டடி பொதுவாகத் தாய்மார்களே இருக்கும். முறையற்ற திருமணம் அல்லது லைவ்- இன் உறவுகள் மூலம் பிறந்த அனைத்து குழந்தைகளும் சட்டப்பூர்வ குழந்தைகளாகவே கருதப்படுவார்கள். அவர்களுக்கும் சொத்துரிமை உட்பட அனைத்து பரம்பரை உரிமைகளும் கிடைக்கும். இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் (HAMA) மற்றும் சிறார் நீதி சட்டம் (JJA) ஆகியவை தத்தெடுப்பு நடைமுறைகளில் தொடர்ந்து பின்பற்றப்படும். பொது சிவில் சட்டத்தின் கீழ் இந்து தத்தெடுப்புகளைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. மறுமணத்திற்கு நிபந்தனைகளை விதிக்கும் பழக்க வழக்கங்களைச் சட்டவிரோதமாக்குகிறது. பஞ்சாயத்து மூலம் விவாகரத்து வழங்குவது உள்ளிட்ட உள்ளூர் நடைமுறைகளைக் குற்றமாக்குகிறது. விவகாரத்து ஏற்படும் போது மெஹர் மற்றும் பராமரிப்பு தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது போன்ற விதிகளை ஆதரிக்கிறது. இந்த மசோதா சில குறிப்பிட்ட செயல்களைக் குற்றமாக ஆக்குகிறது.. இது சிலர், குறிப்பாகச் சிறுபான்மையினருக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்று சிலர் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பொது சிவில் சட்டம் சில குறிப்பிட்ட சமய மற்றும் கலாச்சார நடைமுறைகளைக் குற்றமாக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. தற்போது இந்து திருமணச் சட்டம், ஷரியத் சட்டம் மற்றும் கிறிஸ்தவ திருமணச் சட்டம் உள்ளிட்ட பெர்சனல் அதாவது தனிப்பட்ட சட்டங்கள் என்பது ஒவ்வொரு மதத்திற்கும் மாறுபடுகிறது. அவை அனைத்தையும் பொது சிவில் சட்டம் ஒன்றிணைக்க முயல்கிறது. சமத்துவத்தை உறுதி செய்வது, பாலின நீதியை மேம்படுத்துவது மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை வளர்ப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கமாகும். இதில் தற்போது பின்பற்றப்படும் சில நடைமுறைகள் குற்றம் என அறிவிக்கப்படுகிறது. இது சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று சிலர் கவலை தெரிவித்துள்ளனர். கார்டியன்ஷிப் சட்டங்களில் பாலின சமத்துவத்தை இந்த மசோதா உறுதி செய்யவில்லை. இதனால் தந்தைகளே முதன்மை உரிமை கிடைக்கிறது. அதேநேரம் நாடு முழுக்க அனைத்து தரப்பினருக்கும் ஒரே மாதிரியான தனிப்பட்ட சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கு உத்தரகண்ட்டின் இந்த நடவடிக்கை முன்மாதிரியாக இருக்கிறது. உத்தரகண்ட்டில் இந்த மசோதா வெற்றி பெற்றால் அது மற்ற மாநிலங்களும் ஒரு உத்வேகத்தைத் தரும். இது இந்தியாவின் சமூக மற்றும் சட்டத் துறையில் ஒரு முக்கியமானதாக இருக்கும்.

Related Post