Zerodha சிஇஓ பதிவு.. மாமனார் மளிகை கடை, மருமகன் 270 கோடி சொத்து..!

post-img

Zerodha நிறுவனத்தின் சிஇஓ நித்தின் காமத் லின்கிடுஇன் தளத்தில் ஒரு அழகான பதிவை செய்திருந்தார், வாழ்க்கையை ரேஸ் போல் ஓடிக்கொண்டு இருக்கும் பலருக்கு இந்த பதிவு நாம் என்ன செய்துக்கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்த்தும் பதிவாக விளங்க வாய்ப்பு உள்ளது.

நித்தின் காமத் பதிவில் வாழ்வில் எப்போதும் திருப்தியாக இருப்பதே உண்மையான சுதந்திரத்திற்கான வழி. இதை உணர்த்துபவர் என் மாமனார் சிவாஜி பாட்டீல். அவர் இந்திய ராணுவத்தில் இருந்தார், கார்கில் போரின் போது பனியில் கைகள் உறைந்ததால் விரல்களை இழந்தார். இதன் பின்பு ராணுவ பணியில் ஹவால்தாராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் பெல்காமில் மளிகைக் கடை தொடங்கினார்.

அவருக்கு 70 வயதாகிறது, ஆனால் இன்றும் அவருடைய பல வருடங்களுக்கு முன்பு மாற்று திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டு அவர் வாங்கிய பழைய ஸ்கூட்டரில் , கடைக்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக அவரே உள்ளூர் சந்தைக்கு தொடர்ந்து சென்று வாங்கி வருகிறார். அவருக்கு உதவியாக என் மாமியார் மட்டுமே உள்ளார். இவர் அவருக்கு கடை நடத்தவும், வீட்டை நிர்வகிக்கவும் உதவுகிறார்.

சீமாவுக்கும் எனக்கும் கிடைத்த வெற்றிக்கு பின்பும் என்னுடைய மாமனார் வேலை செய்வதை நிறுத்தவில்லை, நிறுத்தவும் மறுக்கிறார். கடையில் உள்ள பல்வேறு பொருட்களுக்கான லாபம் பற்றி நான் அவரிடம் கேட்டபோது, ​​​​அவர் கண்ணில் இருக்கும் மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது.

உதாரணமாக கடலை மிட்டாய்களுக்கு 25% மார்ஜின் கிடைக்கும் என்றும், ஒரு பெட்டியை ரூ.200க்கு வாங்குவதும், தனித்தனியாக ரூ.250க்கு விற்பதாக கூறிய போது அவர் கண்ணில் மகிழ்ச்சி, மலர்ச்சியை பார்க்க முடிந்தது.   இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த நிலையிலும் அவர் எதற்கும் விரும்புவது இல்லை, இதேபோல் இந்த பிரச்சனை, அந்த பிரச்சனை என புகார் செய்வதையோ நான் பார்த்ததில்லை.

               Zerodha சிஇஓ பதிவு.. வாழ்க்கைல இப்படிதான் இருக்கனும்.. மாமனார் மளிகை கடை, மருமகன் 270 கோடி சொத்து..!

போரில் தன் விரல்களை இழந்ததைப் பற்றிக் கூட அவர் இதுவரையில் எவ்விதமான கவலையை வெளிப்படுத்தியது இல்லை. இந்த நிலையிலும் 2007ல் அவருடைய மகளை எனக்கு திருமணம் செய்து வைக்க அனுமதி கேட்டபோது, ​​அரசு வேலை பெற முயற்சிக்க அறிவுறுத்தினார். நான் வாழ்க்கையில் ஆரோக்கியத்தை அதிகரிப்பது அல்லது எப்படி ஒரு நல்ல வாழ்க்கையை இறுதி வரையில் வாழ்வது பற்றி ஆராய்ந்து வருகிறேன். இதற்கான பதில் மளிகை கடை நடத்தும் என்னுடைய மாமனாரிடம் இருந்து கிடைத்துள்ளது என்றால் மிகையில்லை.

மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருப்பதை எந்த காலத்திலும் நிறுத்த கூடாது, இதேவேளையில் திருப்தியாக இருக்க வேண்டும் என்பது தான் இதற்கான பதிலாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இதை கட்டாயம் பணத்தால் வாங்க முடியாது, என்னுடைய மாமனார் சிறந்த உதாரணம் என்று தெரிவித்துள்ளார்.

Zerodha-வின் சிஇஓ நித்தின் காமத்-ன் சொத்து மதிப்பு 270 கோடி ரூபாய், Zerodha-வில் இருக்கும் பல லட்சம் மக்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை நிர்வாகம் செய்யும் நித்தின் காமத் மளிகை கடை நடத்தும் தனது மாமனாரிடம் இருந்து முக்கியமான வாழ்க்கை பாடத்தை கற்றுள்ளார். 

Related Post