சென்னை: நாடு முழுவதும் நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் பொதுமக்களிடையே அமோகமான வரவேற்பைப் பெற்று வருகிறது. ஹைதராபாத்தில் புஷ்பா 2 சிறப்புக் காட்சியைப் பார்ப்பதற்காக வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில் அம்மாநில அரசு முக்கிய உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் டிசம்பர் 5 ஆம் தேதி காலை ரிலீஸானது. புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. புஷ்பா திரைப்படம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது.
இந்நிலையில், புஷ்பா 2 படத்தில் பீஸ்ட் மோடில் அல்லு அர்ஜுன் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் சாதனையை முறியடித்து முதல் நாளிலேயே 175 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் முதல் நாள் வருமானம் 135 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சி டிசம்பர் 4 ஆம் தேதி இரவு 9.40 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த சிறப்புக் காட்சியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். அப்போது, சர்ப்ரைஸாக எந்தவித முன்னறிவிப்புமின்றி நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு என்ட்ரி கொடுத்திருந்தார். அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக பொதுமக்கள் முந்தியடித்துக் கொண்டு சென்றனர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 37 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவருடைய 13 வயது மகன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் வந்த நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழுவினர் மற்றும் திரையரங்கு மீது ஹைதராபாத் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
சிறப்புக் காட்சி கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த நிலையில் தெலங்கான மாநில அரசு முக்கிய முடிவெடுத்துள்ளது. தெலங்கான மாநிலத்தில் தெலுங்கு மொழியின் முன்னணி படங்களை சிறப்புக் காட்சியில் திரையிடுவதற்கு அந்த மாநில அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பெரிய படங்களுக்கு இதுபோன்ற சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, சலார் திரைப்படம் அதிகாலை 1 மணிக்கு திரையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது
பாகுபலி 2 திரைப்படம் ரிலீஸுக்கு முந்தைய தினம் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. இதேபோல, புஷ்பா 2 திரைப்படத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அப்போது ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக இந்த உயிரிழப்புச் சம்பவம் நேர்ந்துள்ளது. இந்நிலையில், இனிமேல் தெலங்கானா மாநிலத்தில் எந்தவொரு படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட ரெட்டி, தெலங்கான மாநிலத்தில் படங்களுக்கான சிறப்புக் காட்சிக்கான அனுமதி இனிவரும் காலங்களில் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage