"சூப்பர் ப்ளூ மூன்" பார்க்க ரெடியா.. இன்று வானில் !

post-img

சென்னை: சூப்பர் ப்ளூ மூன் எனப்படும், மிகவும் அரிதாக நிகழ்வு ஒன்று வானில் நடக்க போகிறது.. சூப்பர் நீல நிலவு என்றால் என்ன? இது வானில் தோன்ற என்ன காரணம்?
இந்த பிரபஞ்சம் பல ஆச்சரியங்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது.. இந்த ஆச்சரியங்கள் பல சமயங்களில் அரிதான நிகழ்வுகளை கொண்டுள்ளது. இந்த அரிதான நிகழ்வுகளையே அதிசயம் என்கிறார்கள். இதை ஒருமுறை தவறவிட்டால், மீண்டும் நடக்க போகும் அந்த இயற்கை அரிய நிகழ்வுக்காக பல காலம் காத்திருக்க வேண்டியதாகிவிடும். அப்படிப்பட்ட நிகழ்வுதான் இன்று நடக்கிறது.


வெள்ளி நிலா: வானத்தில் புளூ மூன் எனப்படும் வெள்ளிநிலா தோன்ற போகிறது.. இதற்கு தொலை நோக்கி எதுவும் தேவையில்லை. வழக்கமாக தோன்றும் பவுர்ணமியை விடவும், கூடுதல் வெளிச்சத்துடன் பிரகாசமாக நிலவு தெரியும்.


இந்த மாதத்தில் வரக்கூடிய 2வது பவுர்ணமியாக இது அமையப்போகிறது. இந்த மாத தொடக்கத்தில் நிலவு பவுர்ணமியாக இருந்தபோது பூமியில் இருந்து 3,57,530 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.. இன்றைய தினம், இன்னும் பூமிக்கு பக்கத்திலேயே அதாவது, 3,57,244 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து, மிகப்பெரிய வட்ட நிலா பிரகாசிக்கும்.


சிவப்பு ஒளிகள்: ப்ளூ மூன் என்றால், நிலா ப்ளு கலரில் இருக்கும் என்று அர்த்தமில்லை.. நிலவின் சுற்று வட்டப்பாதை மிக குறைவாக இருந்து, அதே நேரம் பவுர்ணமியாக நிலா காட்சியளித்தால், இதுவே ப்ளூ மூன் அல்லது நீல நிலவு என்பார்கள்.. சில நேரங்களில் வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக, சந்திரனின் நிறம் நீல நிறமாக காட்சியளிக்கலாம்.. அல்லது சிவப்பு ஒளியைத் தடுக்கும் வகையில் குறுக்கே ஏதாவது இருந்தால், நிலா நீல நிறத்தில் காட்சியளிக்கலாம்..


நீள் வட்டப்பாதையில் பூமியை நிலவு 4,05,696 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த நிலையில், சூப்பர் ப்ளூ மூனமான இன்று, 3,57,244 கிலோ மீட்டர் தூரத்திலும் பூமியை வலம் வரப்போகிறது.


பெரிய மூன்: அதாவது வழக்கமாக இருக்கும் நிலாவைவிட, 14 சதவீதம் அளவுக்கு பெரியதாக இருக்குமாம். இதற்கு முன்பு கடந்த 2018ல் இப்படித்தான் ப்ளூ மூன் தோன்றியது.. அத்துடன் இப்போதுதான், அரிய நிகழ்வு வருகிறது. இந்த வருடம் 2 முறை பௌர்ணமி நாட்கள் வந்திருப்பதாலேயே, இந்த நிகழ்வைக்காண முடிகிறது.


இன்னைக்கு நைட் மறக்காம வானத்தை பாருங்க.. உங்கள் கண்களை உங்களாலேயே நம்ப முடியாது! இதுதா
இன்றைய தினம் வானில் ப்ளூ மூன் தோன்றும் என்றாலும், சூரியன் மறைவுக்கு பிறகு, இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், இன்று இரவு 8:37 மணிக்கு, பளிச்சென நிலா தெரியும்..


2 சூப்பர் மூன்: இந்த வருடம் மட்டுமே மொத்தம் 4 சூப்பர் மூன் நிகழ்வுகள் நடக்க உள்ளதாம்.. அதில் 2 சூப்பர் மூன் நிகழ்வு இந்த மாதத்திலேயே நடக்குமாம்... முதலாவது சூப்பர் மூன்தான் இன்று நடக்க போகிறது.. இந்த அரிய நிகழ்வை மிஸ் செய்துவிட்டால், மறுபடியும், 2032-ல் தான் அடுத்த சூப்பர் ப்ளூ மூன் வரும் என்கிறார்கள்.

 

 

Related Post