பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் அதுல் சுபாஷ் சமீபத்தில் மனைவி கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார், அவர் தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறி 24 பக்க குறிப்பு மற்றும் 90 நிமிட வீடியோவை விட்டுச் சென்றார்.
அவரின் தற்கொலை சம்பவம் நாடு முழுக்க சர்ச்சையானது. பெண்களுக்கு ஆதரவாக மட்டுமே சட்டங்கள் இருப்பதாக வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மனைவி என்னை கொடுமைப்படுத்தினார்.. அதோடு இல்லாமல் விவாகரத்து வழக்கில் நியாயமே இல்லாமல் பல லட்சங்களை ஜீவனாம்சமாக கேட்டார். வழக்கு நடத்திய நீதிபதியும் என்னிடம் லஞ்சம் கேட்டார் என்று பல குற்றச்சாட்டுகளை சுபாஷ் அடுக்கி உள்ளார்.
இந்த விவகாரம் புதிய திருப்பத்தை அடைந்து உள்ளது. அதன்படி, சுபாஷின் தந்தை பவன் குமார் மீது மருமகள் நிகிதா சிங்கானியா வழக்கு பதிவு செய்துள்ளார். தனது மகன் மூலம்.. தனது மாமனாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளார். அதாவது உங்கள் பேரனுக்கு பராமரிப்பிற்கு பணம் கொடுக்க வேண்டும்.. அதற்காக ஜீவனாம்சம் கொடுங்கள் என்று வழக்கு பதிவு செய்துள்ளார்.
சுபாஷ் -நிகிதா தம்பதியின் மகன் மைனர் என்பதால்.. அவர் சார்பாக நிகிதா தனது மாமனார் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். ஏற்கனவே தற்கொலைக்கு தூண்டியதாக சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியாவை போலீசார் கைது செய்தனர். அதோடு அவரின் அம்மா, தம்பியையும் கைது செய்தனர்.
என்ன நடந்தது?: அதுல் சுபாஷுக்கு கடந்த 2019 இல் திருமணம் நடந்தது. மனைவி, மாமியார், ஆண்களுக்கு எதிரான பாரபட்சமான சட்டங்கள் மற்றும் சிஸ்டம் காரணமாக திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
மனைவி 3 கோடி ஜீவனாம்சம் கேட்டார். அதோடு 4 லட்சம் ரூபாய் மாதம் பராமரிப்பு தொகை கேட்டார். மனைவி தன் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க விடவில்லை. ஜான்பூர் குடும்பநல நீதிமன்ற நீதிபதி ரீட்டா கௌசிக், வழக்கைத் தீர்ப்பதற்கு 4- 5 லட்சம் லஞ்சம் கோரினார்.
மனைவியின் குடும்பத்திற்கு உதவுவதற்காக தனது மனைவிக்கு பல லட்சங்களைக் கொடுத்துள்ளார், ஆனால் கடைசியில் வரதட்சணைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார். சுபாஷின் மனைவியின் தந்தை திருமணமான உடனேயே நோயால் இறந்தார், ஆனால் தனது கணவர் "வரதட்சணை" கேட்டதால்தான் என் அப்பா அதிர்ச்சியில் இறந்ததாகக் கூறி அந்த பெண் அவரது குடும்பத்தினர் மீது கொலைப் பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்.
நிகிதா பின்னணி: நிகிதா சிங்கானியா பல லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார். அதே சமயம் அவர் தனது கணவர் அதுல் சுபாஷிடம் விவாகரத்தின் போது 3 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டுள்ளார். மேலும் 4 லட்சம் ரூபாய் மாதம் பராமரிப்பு கேட்டு கோர்ட் மூலமாக 2 லட்சம் ரூபாய் பராமரிப்பு பெற ஒப்புக்கொண்டுள்ளார்.
இதெல்லாம் போக கணவர் மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளார். கணவரை கடந்த சில வருடங்களாக கடுமையாக கொடுமை செய்துள்ளார். இதனால் கணவர் தற்போது தற்கொலை செய்து கொண்ட நிலையில் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியாவை அசெஞ்சர் ஐடி நிறுவனத்தில் இருந்து தூக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அவரை போன்றவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது. அவர் பல லட்சங்களில் வருமானம் ஈட்டும் நிலையில் .. கணவரிடம் அவ்வளவு பணம் கேட்டு.. கடைசியில் அவரின் மரணத்திற்கே கூட காரணமாக மாறிவிட்ட நிலையில்.. நிகிதாவை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் இணையத்தில் அசெஞ்சர் தற்போது டிரெண்டாகி வருகிறது.