டெல்லி: நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற தம்மை பாஜக எம்பிக்கள் தடுத்து தள்ளிவிட்டதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் ராகுல் காந்திதான் தம்மை தடுத்து தள்ளிவிட்டதாக பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி புகார் கூறினார். அத்துடன் படுகாயம் ஏற்பட்டதாக கூறி பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி, வீல்சேரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.