8-மாத குழந்தை பரிதாப பலி.. மொபைல் சார்ஜிங் கேபிளில் இவ்வளவு பெரிய ஆபத்தா?

post-img

செல்போன் பயன்படுத்துபவர்கள் சார்ஜிங் விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.இந்நிலையில் செல்போன் சார்ஜர் வயரை வாயில் வைத்த 8 மாத பெண் குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ்-சஞ்சனா தம்பதி. இவர்களுக்கு சானித்யா என்ற எட்டு மாதக் குழந்தை இருந்தது.

குறிப்பாக சந்தோஷ் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்துவருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சந்தோஷ் மற்றும் சஞ்சனா தம்பதி போனை சாரஜர் போட்டிருக்கின்றனர். சில மணி நேரத்தில் போன் சார்ஜ் ஆனதும் செல்போனை எடுத்துவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் அவர்கள் பிளக்கில் செருகியிருந்த சார்ஜர் இணைப்பை அணைக்காமல் அப்படியே விட்டுவிட்டனர்.

இதற்கிடையே தான் சானித்யா அந்த சார்ஜர் வயரைப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தாகத் தெரிகிறது. அப்படி விளையாடிக் கொண்டிருக்கும் போது குழந்தை தெரியாமல் சார்ஜர் பின்-ஐ வாயில் வைத்திருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியிருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சானித்யாவை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனாலும் குழந்தையைக் காப்பற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் போனை சார்ஜ் செய்யும் போது போனை இயக்க கூடாது. குறிப்பாக போன் சார்ஜ் ஆனதும் சார்ஜரை வெளியே மின் இணைப்பில் இருந்து வெளியே எடுத்துவிட வேண்டும் அல்லது ஆப் செய்ய வேண்டும்.

குறிப்பாக செல்போன் சார்ஜர் மற்றும் கேபிள் வயர், இணையதள வயர்கள் போன்றவற்றிலும் மின்சார சப்ளை இருக்கும். எனவே வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வயர்களைக் குழந்தைகள் கையாள விடுவது போன்றவைகளைத் தவிர்த்து, எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சார்ஜ் ஏற்றிய படி வீடியோக்கள் பார்ப்பது,செல்போனில் பேசுவது, கேம் விளையாடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். செல்போன்களை இப்படி பயன்படுத்துவது ஆபத்தை விளைவிப்பது எனவும் செல்போன் நிறுவனங்கள் எச்சரித்து இருக்கின்றன. ஆனாலும் இதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் பயன்படுத்தும் பழக்கம் பலருக்கும் உள்ளது. எனவே போனை சார்ஜ் செய்யும் போது வாய்ஸ்கால் பேசுவது, வீடியோ கேம் விளையாடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மேலும் சில சமயங்களில் போன் வெடிப்பதற்கான காரணம் என்னவென்றால், செல்போனில் இருக்கும் பேட்டரி மட்டும்தான். பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது. அப்போது செல்போனும் தானாக வெடிக்கிறது. பேட்டரி வெடிப்பதற்குக் காரணம், சார்ஜர் மட்டும்தான். ஒரு மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும்.

ஆனால் வேறு ஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது. எடுத்துக்காட்டாக குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது. இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும். அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது.

அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்துச் சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போடுவது மிகவும் நல்லது. மேலும் போனின் பேட்டரி விஷயத்தில் மற்றும் போனின் சார்ஜிங் விஷயத்திலும் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும்.


Related Post