தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.. வரும் ஜனவரி 1ம் தேதி முதல் எல்லாமே மாறுது

post-img
கோவை: தமிழக அரசின் வருவாய் துறை, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, வழங்கல் துறை உள்பட பல்வேறு அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றை கருவூலம் அதிகாரிகள் தான் பராமரித்து வருகிறார்கள். இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பண்டிகை முன்பணம் மற்றும் வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன் பணம் பெற களஞ்சியம் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசில் வருவாய் துறை, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, உணவு பொருட்கள் வழங்கல் துறை, காவல்துறை, நிதித்துறை, தலைமை செயலகம், நெடுஞ்சாலைத்துறை, சமூக நலத்துறை, வேலைவாய்ப்புகள் துறை, விளையாட்டு துறை, பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்பட தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏராளமான அரசு ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதேபோல் அரசு பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அரசு கல்லூரிகளில் பேராசிரியர்கள், உதவி பேராசியர்கள் பணபுரிகிறார்கள். இவர்களின் சம்பளம், ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்களை சார்நிலை கருவூலத்தில் பராமரித்து வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர்களின் மேலாண்மைக்காக களஞ்சியம் செயலியை தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த களஞ்சியம் செயலி மூலம் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்டவற்றை களஞ்சியம் செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது அந்த முறை தான் தற்போது அமலில் இருக்கிறது. இந்த களஞ்சியம் செயலில், ஓய்வு பெறுபவர்களின் பணிக்கொடை விவரம், வருங்கால வைப்பு நிதி தொகை ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி முதல் களஞ்சியம் செயலி முழுமையாக பயன்பாட்டிற்கு வருகிறது. இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றை களஞ்சியம் செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது தற்செயல் விடுப்புகளை தங்களது சம்பளம் வழங்கும் அலுவலர் மூலம் எடுத்து வந்தனர். இனி அந்த முறை கிடையாது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தனியார் ஐடி நிறுவனங்களை போல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது சம்பள விவரங்கள், பே சிலிப் உள்ளிட்டவற்றை களஞ்சியம் செயலி மூலம் டவுன்லோடு செய்து கொள்ள முடியும். அதேபோல் தனியார் நிறுவனங்களில் உள்ளது போல், பண்டிகை முன்பணம், வருங்கால வைப்பு தொகை முன்பணம் ஆகியவற்றிற்கும் களஞ்சியம் செயலி மூலம் விண்ணப்பிக்க முடியும். மேலும் பொது வருங்கால வைப்பு நிதி (ஜி.பி.எப்) மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (சி.பி.எஸ்.) தொகையை களஞ்சியம் செயலி மூலம் சரிபார்க்க முடியும். மேலும் ஓய்வூதியர்கள் தங்களது வருடாந்திர நேர்காணலை களஞ்சியம் செயலியில் செய்து கொள்ள முடியும், பென்சன் சிலிப் உள்ளிட்டவற்றை இதில் பெற முடியும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

Related Post