சென்னை: சென்னையில் மனநலம் குன்றிய கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய மாணவி ஒருவர் கல்லூரியில் பயின்று வருகிறார். 10 ஆம் வகுப்பு வரை மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளியில் படித்த அந்த மாணவி, பிளஸ் 2 தேர்வை தனித் தேர்வராக எழுதி தேர்ச்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து, அண்ணா சாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், அந்த மாணவிக்கு திடீரென கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவரது தந்தை விசாரித்தபோது, அந்த மாணவியை, தனது தோழி மூலம் அறிமுகமான ஆண் நண்பர்கள் அடிக்கடி வெளியே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. சென்னையில் சில லாட்ஜ்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதையடுத்து, மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையை தொடர்ந்து 2 பேர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி மாணவன் சுரேஷ் மற்றும் பள்ளி மாணவன் ஒருவர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிலரும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். கல்லூரி மாணவன் சுரேஷ் மற்றும் பள்ளி மாணவன் என 2 பேரை கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்ய தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கல்லூரி மாணவர் மணி ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage