ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ' ஃபாரெல் ரத்தன் டாடா அவர்களை நேரில் சந்தித்து ஆஸ்திரேலிய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருதை வழக்கி கௌரவித்தார். மேலும் இந்த நிகழ்வின் புகைப்படத்தையும் டிவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.
டிவிட்டரில் ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ' ஃபாரெல் ரத்தன் டாடா அவர்களை வணிகம், தொழில் மற்றும் நன்கொடையில் தலைசிறந்தவர் என்று பாராட்டினார். ரத்தன் டாடா-வின் பங்களிப்பு ஆஸ்திரேலியாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், ஆஸ்திரேலியா - இந்திய நட்புறவில் நீண்ட காலமாக பங்காற்றியுள்ளார் எனவும் டிவிட்டரில் தெரிவித்தார்.
சமீபத்தில் 2023 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட 106 பத்ம விருதுகளில் மூன்று பத்ம விபூஷன், ஐந்து பத்ம பூஷன் மற்றும் 45 பத்மஸ்ரீ என மொத்தம் 53 விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மார்ச் மாத துவக்கத்தில் வழங்கினார். இதில் இந்திய தொழில்துறையில் சிறந்து விளங்கும் வல்லுனர்களான ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா அவர்களுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. வர்த்தகம் மற்றும் தொழிற்துறையில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா செய்த புரட்சிக்கும் பணிகளை பாராட்டி மறைந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவுக்கும் பத்மஸ்ரீ விருது இன்று வழங்கப்பட்டது.