சிவகாசி அருகே மண்குண்டாம்பட்டியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சண்முகையா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை மண்குண்டாம்பட்டியில் கேப் வெடிகள் தயாரிக்கும் அந்த பட்டாசு ஆலையில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். பிற்பகலில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து காவல்துறையினரும், வருவாய் துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.