சென்னை: சென்னையில் நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்," மணிப்பூரில் கொடுமைகள் நடக்கும் நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் மத்தியில் ஒரு அரசு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆளும் அரசு வேங்கை வயல் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருக்கிறது" என விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சரும் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய வருமான அண்ணல் அம்பேத்கரின் குறித்த தகவல்கள் இடம்பெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் விகடன் விகடன் குழும நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளரும், நூலை உருவாக்கியவருமான ஆதவ் அர்ஜுனா அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பேரனான ஆனந்த் டெல்டுண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புத்தகத்தை வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய விஜய்," அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் இந்த நாளில் நான் கலந்து கொள்வதை பெரும் வரமாக கருதுகிறேன். மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் கலந்து கொண்டிருக்கும் மேடையில் நான் பங்கேற்று இருப்பதும் பெருமையாக இருக்கிறது. இன்றைக்கு நீங்கள் விடுமுறைக்குச் செல்லும் ஊர் எது என்று கேட்டால் நியூயார்க் என்று சொல்வார்கள். அங்கு இரண்டு நாட்கள் தங்குவதே பெருமையாக இருக்கும்.
அந்த ஊரிலேயே படித்து பட்டம் வாங்கிய அசாத்திய திறமை கொண்ட திறமைசாலி ஒருவர் இருந்தார். நீ இந்த சாதியில் பிறந்திருக்க.. நீ ஏன் பள்ளிக்கு வருகிறாய் ஒரு சமூகமே அவரை தடுத்தது. அதையும் மீறி அந்த மாணவர் பள்ளிக்கூடம் சென்றார். தாகத்திற்கு தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை. ஆனால் ஒரே ஒரு சக்தி மட்டும் தான் நீ படி என்று சொல்லிக் கொண்டே இருந்தது. அந்த சிறிய வயதில் அந்த மாணவருக்கு எப்படி ஒரு வைராக்கியம் வந்தது என நினைத்தபோது பிரம்மிப்பாக இருந்தது.
அந்த மாணவர் வேறு யாருமில்லை நமது அம்பேத்கர் தான்.. பிறப்பால் நாம் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் அரசியல் சாசன சட்டத்தை கொடுத்தவர் அம்பேத்கர். இன்றைய சூழலில் அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவைப் பற்றி என்ன நினைப்பார். நல்லதாக நினைப்பாரா? அல்லது தீயதாக நினைப்பாரா? ஜனநாயகத்தின் தேவை சுதந்திரமான நியாயமான தேர்தல். ஆனால் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என நான் கூறவில்லை.
தேர்தல் நியாகமான நடக்க தேர்தல் ஆணையர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிப்பூரில் கொடுமைகள் நடக்கும் நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் ஒரு அரசு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆளும் அரசு வேங்கை வயல் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இதையெல்லாம் பார்த்தால் அம்பேத்கர் கோபப்படுவார். இங்கே சம்பிரதாயத்திற்காக அரசியல் நடக்கிறது. சமுதாயத்திற்காக ட்வீட் போடுவது சம்பிரதாயத்திற்காக வெள்ளத்தில் நின்று புகைப்படம் எடுப்பது. என அரசியல் செய்ய தெரியாது மக்களின் உரிமைகளுக்காகவும் உணர்வு பூர்வமாகவும் குரல் கொடுப்பவனாக நான் இருப்பேன்" என கூறினார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage