நீங்க இபி பில் கட்டியாச்சா? கரண்ட் பில்லில் வருது புதிய மாற்றம்.. உடனே நோட் பண்ணுங்க

post-img

சென்னை: கரண்ட் பில் செலுத்துவது குறித்து அடுத்தடுத்த புதிய மாற்றங்களை தமிழக அரசு செய்து வருகிறது. இந்த தகவலானது, பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.


தமிழக மக்களின் வசதிக்காகவும், பயன்பாட்டுக்காகவும், மின்வாரியத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கையில் எடுத்துள்ள நிலையில், அதற்கான டெண்டரையும் அரசு கோரியுள்ளது..


மின் கணக்கீட்டாளர்களின் பணியை, இந்த ப்ளூடூத் மீட்டர் செய்கிறது. இதனால் கால நேரம் குறைவதுடன், துல்லியமான கரண்ட் பில் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளலாம்


மொபைல் செயலி: இதேபோல, இன்னொரு வசதியையும் மின்துறை கொண்டுவரப்போவதாக சில நாட்களுக்கு முன்பு செய்தி வந்தது.. அதாவது, மின் ஊழியர்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்கிறார்கள்..


சில நாட்களில், மின் கட்டண விபரம் நுகர்வோருக்கு, SMS வாயிலாக அனுப்பப்படுகிறது. ஆனால், கணக்கெடுத்த உடனேயே, கட்டண விபரம் தெரிவிக்க, புது "மொபைல் செயலி" அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளதாம். இந்நிலையில், இன்னொரு வசதியையும் மின்துறை அமல்படுத்த போகிறதாம்.


கரண்ட் பில்: அதாவது, கரண்ட் பில் கட்டவில்லையானால், மின் இணைப்பு துண்டிக்கப்படுவது வாடிக்கை.. ஆனால், இப்படி மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பதை SMS மூலமாகவும், இமெயில் மூலமாகவும் அனுப்ப போகிறார்களாம்.
இந்த மெசேஜ்ஜை பார்த்ததுமே, கஸ்டமர்கள் அலர்ட் ஆவதுடன், மின்சார ஊழியர்களையும் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிந்து கொள்ளலாம். இதற்கு பிறகு, 6 மணி நேரம் டைம் தரப்படும்.. கரண்ட் பில்லை கட்டியதும், இந்த 6 மணி நேரத்திற்குள் மறுபடியும் கனெக்‌ஷன் தந்துவிடுவார்கள்.

 

அபராதம்: இதற்கெல்லாம் மின்வாரிய அதிகாரிகள் நேரடியாக வீட்டுக்கு வர வேண்டியதேயில்லை.. அபராதத்துடன் மின் கட்டணத்தை செலுத்திவிட்டால், தானாகவே இணைப்பை மறுபடியும் தந்துவிடுவார்கள்.


அதேபோல, ரீடிங் எடுப்பதிலும் ஒரு மாற்றம் வரப்போகிறதாம்.. அதாவது இதுவரை 147 யூனிட்கள் என்றால், அதை 150 என்று ரவுண்டாக கணக்கு செய்வது வழக்கம்.. இதனால், கட்டணமும் லேசாக அதிகமாகிவிடும். ஆனால், இனிமேல் இந்த நடைமுறை கிடையாது..


யூனிட்கள்: எத்தனை யூனிட்கள் பயன்படுத்தப்பட்டதோ, அதற்கு மட்டும் "துல்லியமாக" கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்... அதற்குரிய கட்டணத்தை மட்டுமே கட்டினால் போதும்... அதுவும் ஆன்லைனில் கட்டினால், எந்த பிரச்சனையுமே வராது.. நேரடியாக கரண்ட் பில் கட்ட சென்றால், சரியான சில்லறையுடன் சென்றாலே போதும் என்கிறார்கள். நாளுக்கு நாள், இந்த சலுகைகளும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருவது, பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.

 

Related Post