சந்திரயான் 3 விண்கலம் : விண்ணில் பாய்வதற்கான கவுன்ட்டவுன் தொடக்கம்

post-img

நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டிற்கான இருபத்தைந்தரை மணி நேர கவுன்டவுன் தொடங்கியது.

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நாளை விண்ணை நோக்கி பாய உள்ளது.

சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநரான விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் தலைமையில் விண்ணில் ஏவுவதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  இதற்கு தேவையான அனைத்து இறுதி கட்ட ஏற்பாடுகளும் துவங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சந்திரயான் 3 செயற்கைக்கோள் மாதிரியுடன் இஸ்ரோ குழுவினர் இன்று காலை திருப்பதி கோயிலுக்கு சென்றனர்.

இத்திட்டம் வெற்றிபெற வேண்டி, திருப்பதியில் விஐபி டிக்கெட் மூலம் சாமி தரிசனம் செய்த விஞ்ஞானிகள் குழு, சந்திரயான் -3 செயற்கைக்கோள் மாதிரியை வைத்து வழிபட்டனர்.

சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் 'LVM 3 M-4 ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் நிறைவடைந்தன.

இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத்திற்கான இருபத்தைந்தரை மணி நேர கவுன்டவுன் இன்று மதியம் ஒரு மணிக்கு தொடங்கியது. கவுன்டவுன் முடிந்து சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து, நாளை மதியம் 2:35 மணியளவில் ராக்கெட் விண்ணில் பாய்கிறது. நிலவுக்கு அனுப்பப்படும் 3வது விண்கலமான சந்திரயான்-3 விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Post