70 வயதில் விவாகரத்து செய்த மனைவி.. ரூ.3 கோடி ஜீவனாம்சம் வழங்க.. 72 வயது கணவருக்கு கோர்ட் உத்தரவு

post-img
சென்னை; இந்தியாவில் தற்போது விவாகரத்து வழக்குகள்.. அந்த வழக்கில் கேட்கப்படும் ஜீவனாம்சங்கள் போன்ற விவகாரங்கள் கவனம் பெற்று வருகிறது. இந்த நிலையில் ஹரியானாவில் வயது முதிர்த்த தம்பதிகள் பெற்றுக்கொண்ட விவாகரத்து ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயதான விவசாயி சுபாஷ் சந்த், தனது மனைவியான சந்தோஷ் குமாரி (73) என்பவரை நேற்று பிரிந்தார். இவர்கள் 44 வருடங்களாக திருமண உறவில் இருந்தனர். 18 வருடங்களாக நீடித்து வந்த நீண்ட சட்டப் போராட்டம்.. மூலம் 44 வருடங்களாக திருமண உறவில் இருந்த தம்பதிகள் பிரிந்தது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. 18 வருடத்திற்கு முன் விவாகரத்துக்கு தாக்கல் செய்தனர். அதன்பின் பிரிந்து வாழ்ந்தனர். நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் இப்போதுதான் அவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது. இதில் 3.1 கோடி ரூபாய் செட்டில்மென்ட் கணவன் சார்பாக மனைவிக்கு வழங்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நிறைவேற்ற கணவர் சந்த் தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று மனைவிக்கு பணம் கொடுத்துள்ளார். விவசாய நிலங்கள், பயிர்களை விற்று உள்ளார். 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை விற்று உள்ளார். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நீண்ட விசாரணைக்கு பின், நீண்ட மத்தியச பேச்சுகளுக்கு பின் ஒருவழியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அவர் இறந்த பிறகு, அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சொத்தில் எந்த உரிமையும் இருக்காது. இதற்கு மாற்றாகவே 3 கோடி ரூபாய் ஜீவனாம்சம் வழங்கி உள்ளார். மனைவி செய்த கொடுமையைக் காரணம் காட்டி, 2006 இல் சந்த் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். அவரது ஆரம்ப காலத்தில் தாக்கல் செய்த விவாகரத்து மனு 2013 இல் கர்னால் குடும்ப நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை அணுகினார், அங்கு நவம்பர் 4, 2024 அன்று மத்தியஸ்தத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு முன்பு வழக்கு 11 ஆண்டுகள் நடந்தது. இதில் டிமாண்ட் டிராப்ட் மூலம் ரூ.2.16 கோடியும், பயிர் விற்பனை மூலம் ரூ.50 லட்சம் ரொக்கமும், ரூ.40 லட்சம் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களும் வழங்க வேண்டும் என்று சந்திற்கு உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுபாஷ் தற்கொலை: சமீபத்தில்தான் விவாகரத்து காரணமாக பெங்களூரில் ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதுல் சுபாஷுக்கு கடந்த 2019 இல் திருமணம் நடந்தது. மனைவி, மாமியார், ஆண்களுக்கு எதிரான பாரபட்சமான சட்டங்கள் மற்றும் சிஸ்டம் காரணமாக திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்ய உள்ளதாக கூறியுள்ளார். மனைவி 3 கோடி ஜீவனாம்சம் கேட்டார். அதோடு 4 லட்சம் ரூபாய் மாதம் பராமரிப்பு தொகை கேட்டார். மனைவி தன் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க விடவில்லை. ஜான்பூர் குடும்பநல நீதிமன்ற நீதிபதி ரீட்டா கௌசிக், வழக்கைத் தீர்ப்பதற்கு 4- 5 லட்சம் லஞ்சம் கோரினார். மனைவியின் குடும்பத்திற்கு உதவுவதற்காக தனது மனைவிக்கு பல லட்சங்களைக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவரின் மனைவி நிகிதா சிங்காரியாவின் சம்பளம் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. நிகிதா சிங்கானியா பல லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார். அவரின் மாத சம்பளம் 1.20 லட்சம். வருமான வரி போக 1.10 லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார். அவர் திருமணத்தின் போது ஒரு ரூபாய் கூட வரதட்சணை கொடுக்கவில்லை. தனது கணவர் "வரதட்சணை" கேட்டதால்தான் என் அப்பா அதிர்ச்சியில் இறந்ததாகக் கூறி அந்த பெண் அவரது குடும்பத்தினர் மீது கொலைப் பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார். அதே சமயம் அவர் தனது கணவர் அதுல் சுபாஷிடம் விவகாரத்தின் போது 3 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டுள்ளார். . மேலும் 4 லட்சம் ரூபாய் மாதம் பராமரிப்பு கேட்டு கோர்ட் மூலமாக 2 லட்சம் ரூபாய் பராமரிப்பு பெற ஒப்புக்கொண்டுள்ளார். விவாகரத்து நடக்கும் முன்பு வரை.. கணவரிடம் இருந்து 80 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்று வந்துள்ளார். இதெல்லாம் போக கணவர் மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளார். கணவரை கடந்த சில வருடங்களாக கடுமையாக கொடுமை செய்துள்ளார். சுபாஷ் மீது கொடுமை படுத்தியதாக புகார் வைத்துள்ளார்.

Related Post