‛இட்லி’ காதல்!மெட்ராசுக்கு பறந்த கடிதங்கள்! இவங்க தான் ‛பேவரைட்’ - கமலா ஹாரிஸ்!

post-img

இட்லி காதல் முதல் பேவரைட் நபருக்கு எழுதிய கடிதங்கள் வரை பல்வேறு முக்கிய விஷயங்களை அவர் மிகவும் ரசிக்கும் படி தெரிவித்து அனைவரின் மனங்களையும் கவர்ந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். நியூயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோபைடன் இரவு விருந்து அளித்தார். இதில் இந்தியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

My favorite person is my grandpa and i really understand love of good idli in Madras, says Kamala Harris

மேலும் அதிபர் ஜேபைடனுக்கு பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதன்பிறகு நேற்று பிரதமர் மோடிக்கு துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஷ் லஞ்ச் (மதிய விருந்து) வழங்கினார்.

இந்த விருந்தில் பிரதமர் மோடிக்கு வெவ்வேறு வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த வேளையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனக்கு, இந்தியாவுக்கும் இடையேயான உறவை பற்றி மனம் திறந்து பேசினார். குறிப்பாக சென்னையை அப்போதைய பெயர் மெட்ராஸ் எனக்கூறி தனது மாமா, சித்தி, தாத்தா ஆகியோருடன் சுவையான இட்லியை நினைவுக்கூறியது அனைவரையும் கவர்ந்தது.

இதுதொடர்பாக கமலா ஹாரிஸ் ஆற்றிய உரையில் கூறியதாவது:

இந்தியா என்பது எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பகுதியாக உள்ளது. இந்தியாவுடன் நான் ஆழமாக இணைந்துள்ளேன். ஏனென்றால் இந்தியாவில் வரலாறும், அது கற்றுத்தரும் பாடங்களும் என்னை மட்டுமின்றி உலகையும் வடிவமைத்துள்ளன என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. உலகமெங்கும் உள்ள பலகோடி மக்களுக்கு இறையன்மை, ஜனநாயகத்துக்கான அர்ப்பணிப்பை இந்தியா வெளிக்காட்டி வருகிறது.

நானும் என் சகோதரி மாயாவும் அடிக்கடி இந்தியா வந்துள்ளோம். இதற்கு காரணம் எங்கள் அம்மா தான். ஏனென்றால் என் அம்மா இந்தியாவை சேர்ந்தவர். சிறுவயதில் ஒவ்வொரு ஆண்டும் என்னையும், என் சகோதரியையும் அம்மா இந்தியா அழைத்து செல்வார். இதன் பின்னணியில் சுவாரசிய காரணம் உள்ளது. என் அம்மா தான் பிறந்த நாட்டை எங்களுக்கு காட்ட வேண்டும். அவளது உறவுகளை நாங்கள் மறந்துவிடக்கூடாது என்பது தான் முழுமுதற் காரணமாகும்.

இந்தியாவில் என் தாத்தா, பாட்டி மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நகரில் இருந்தனர். அங்கு தான் நாங்கள் அடிக்கடி வருவோம். இந்தியா வரும்போதெல்லாம் நான் எனது தாத்தா, பாட்டி, மாமா, சித்தியுடன் அதிக நேரத்தை செலவிடுவேன். இன்னும் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் வழங்கும் நல்ல சுவையான இட்லி எனக்கு மிகவும் பிடிக்கும். இட்லியின் சுவையில் இருந்தே அவர்களின் அன்பை(புன்சிரிப்புடன்) என்னால் புரிந்து கொள்ள முடியும்.

என் வாழ்க்கையில் எனக்கு மிகவும் பிடித்த நபர்களில் ஒருவர் என் தாத்தா. எனது குழந்தை பருவம் முழுவதும் நாங்கள் இருவரும் பேனா நண்பர்களாக (இருவரும் கடிதம் மூலம் பேசி கொள்வதை பேனா நண்பர்கள் என சொல்வார்கள்) இருந்தோம். எங்கள் குடும்பத்தில் நான் தான் மூத்த பேத்தி. இதனால் கலாசாரத்தை மறக்காமல் இருக்க வேண்டும் என குடும்பத்தினர் கூறினர். இதனை என் தாத்தா எனக்கு உணர்த்தினார். என்னை போலவே அவருக்கு பிற பேரக்குழந்தைகளும் பிடிக்கும். அவர்களுக்கும் எங்கள் தாத்தா என்றால் பேவரைட் தான்'' என்றார்.

அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிசின் தாய் ஷியாமளா தமிழகத்தை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். கமலா ஹாரிசின் தாய் ஷியாமளாவின் குடும்பத்தினர் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்களின் பூர்விகம் தமிழ்நாட்டின் திருவாரூரில் உள்ள துளசேந்திரபுரம். கமலா ஹாரிசின் தாத்தா பெயர் கோபாலன். இவர் தான் கமலா ஹாரிசின் தந்தை ஆவார். இவர் தான் கமலா ஹாரிசீன் பேவரைட் நபர் ஆவார்.

Related Post