ஒருத்தர் இல்லை.. மொத்தம் 3 பேர் இருக்காங்க.. 4 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிங்க பார்க்கலாம்

post-img

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரே ஒரு பெண் உள்ளது போல் இருக்கிறது. ஆனால் நன்கு உற்று பார்த்தால் தான் தெரியும் இந்த படத்தில் ஒருத்தர் இல்லை மொத்தம் 3 பேர் இருக்கிறார்கள் என்று. உங்களுடைய கண்களுக்கும் மேலும் இரண்டு பேர் இருப்பது தெரிகிறதா? இல்லையெனில் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள். 4 செகண்டுக்குள் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால் ஆகும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். சோர்வாக இருக்கும் நேரத்தில் இது போன்ற இல்யூஷன் படங்களுக்கு விடையளிப்பதன் மூலம் பலரும் உற்சாகமாகிவிடுகிறார்கள். ஏனென்றால் இதில் மறைந்திருக்கும் விடைகளை கண்டுபிடிக்க பலரும் முயற்சி செய்யும் போது அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்து யோசிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.
இதன் காரணமாகவே ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அப்படி இன்று ஒரு இல்யூஷன் படத்தில் இணையத்தில் வட்டமிடுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூசன் படத்தில் பெண் ஒருவர் பூந்தொட்டியை பார்த்துக்கொண்டு நிற்பது போல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பூவை கையில் வைத்து கொண்டு இருப்பது போல் உள்ளது.
முதலில் இந்த படத்தை பார்க்கும் போது மேலோட்டமாக இவை மட்டும் தான் தெரிகின்றது. ஆனால் உண்மையில் இந்த படத்தில் மேலும் இரண்டு பேர் உள்ளனர். அது உங்கள் கண்களுக்கு தெரிகிறதா? தெரிந்தது என்றால் நீங்கள் கில்லாடி தான். ஆனால் தெரியாதவர்கள் 4 செகண்டுக்குள் கண்டுபிடிங்க பார்க்கலாம். உங்களுக்கு 4 செகண்ட் டைம் கொடுக்கப்படுகிறது.
அதற்குள் படத்தில் மறைந்திருக்கும் இரண்டு மனித முக உருவங்களை கண்டுபிடிக்க முடியுமா? என்ன சவாலுக்கு ரெடியா? ஓகே டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1.. 2.. 3.. 4. ஒகே டைம் முடிந்தது. பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். ரொம்பவே எளிதான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இது.
ஆனால் விடை எங்கே உள்ளது என்று இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு ஒரு குழு கொடுக்கிறோம். மீண்டும் ஒருமுறை முயற்சித்து பாருங்கள். அதாவது படத்தை தலைகீழாக வைத்து பாருங்கள். இது தான் குழு. கண்டுபிடிங்க பார்க்கலாம். குறிப்பாக பூந்தொட்டிக்கு வலது புறம் மற்றும் இடது புறம் மட்டும் உன்னிப்பாக கவனித்து பாருங்கள். இரண்டு மனித உருவம் உங்கள் கண்களுக்கு தெரியும்.
இப்போது பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறோம். அப்படியும் தெரியவில்லையே என்பவர்கள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Related Post