ஜிஎஸ்டி வரி முறையில்.. வருது மிகப்பெரிய மாற்றம்.. விலை உயரப்போகும், குறையப்போகும் பொருட்கள் எவை?

post-img
சென்னை: ஜிஎஸ்டி கவுன்சில் பல வரிகளை இந்த முறை மாற்ற உள்ளது. இதற்காக பல்வேறு பரிந்துரைகள் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு சென்றுள்ளது. Zomato மற்றும் Swiggy போன்ற உணவு டெலிவரி செயலிகளை பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றும் வந்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் உணவு விநியோகக் கட்டணங்கள் மீதான ஜிஎஸ்டியை 5 சதவீதமாகக் குறைக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வரி விதிப்பு 18 சதவீதமாக உள்ளது. டிசம்பர் 21, சனிக்கிழமையன்று ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூடுகிறது, பின்னர் இது தொடர்பான முடிவு அறிவிக்கப்படும். அறிக்கையின்படி, வரிக் குறைப்பு ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வந்ததாக கருதப்படும்.. இதை அடிப்படையாக வைத்து ஜிஎஸ்டி ரீபண்ட் பெற முடியும்.. அனைத்து தனிநபர் உடல்நலக் காப்பீட்டுக் கொள்கைகளின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதமாகக் குறைத்தல், மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டில் விலக்கு நீட்டிக்கப்படுதல் போன்ற முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. EVகள் (மின்சார வாகனங்கள்) உட்பட அனைத்து கார்களுக்கான கட்டணத்தை 18 சதவீதமாக உயர்த்த அதிகாரிகள் குழு பரிந்துரைத்துள்ளது. குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய நீண்ட கால ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு GST விலக்கு அளிக்க GoM பரிந்துரை செய்துள்ளது. செகண்ட் ஹாண்ட் வண்டிகளுக்கு 18% GST விதிக்கப்படும். முன்பு 12% 18% என இரண்டு வகை வரிகள் இருந்தது.. அதை 18% என ஒரே வரியாக மாற்ற பரிந்துரை செய்து உள்ளனர். ஜிஎஸ்டி வரி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் காரணமாக ரெடி மேட் உடைகளின் விலை உள்ளிட்ட முக்கிய பொருட்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ஜிஎஸ்டி விகிதங்களை முறைப்படுத்துவதற்காக ஜிஓஎம் குழு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு ஜவுளி உட்பட 150 பொருட்கள் மற்றும் சேவைகளை மறுசீரமைக்க பரிந்துரைத்து உள்ளது. புகையிலை மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களுக்கு தற்போதுள்ள 28 சதவீதத்திற்கு (இழப்பீட்டு செஸ் தவிர்த்து) பதிலாக 35 வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ஜவுளி, மிதிவண்டிகள், உடற்பயிற்சி புத்தகங்கள் இதனால் உயரும். அதே சமயம் பொதுவான பயன்பாட்டு பொருட்களுக்கான விலைகளை குறைக்க GoM பரிந்துரைத்துள்ளதாக நம்பப்படுகிறது. ஜவுளிப் பொருட்களுக்கான விலை ₹1,500 வரை இருந்தால் அதற்கு 5% வரி விதிக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் ₹1,500 முதல் ₹10,000 வரை விலையுள்ள பொருட்களுக்கு 18 சதவீத வரியை விதிக்க முன்மொழியப்பட்டு உள்ளது. ₹10,000க்கு மேல் உள்ள ஜவுளிகளுக்கு, 28 சதவீதமாக வரி விதிக்க விதி கொண்டு வரப்பட்டு உள்ளது. உயர்தர கைக்கடிகாரங்கள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட பல ஆடம்பரப் பொருட்களின் மீதான GST விகிதங்களை உயர்த்த GoM பரிந்துரைத்துள்ளதாக நம்பப்படுகிறது. ₹25,000க்கு மேல் விலையுள்ள கைக்கடிகாரங்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அதிகரிக்க GoM முன்மொழிந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், ₹15,000க்கு மேல் விலையுள்ள ஷூக்களும் வரி உயர்வு விதிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இந்த வரி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ₹10,000க்கும் குறைவான விலையுள்ள சைக்கிள்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க GoM முன்மொழிந்துள்ளது. காற்று நிரப்பப்பட்ட பானங்கள், சிகரெட்டுகள், புகையிலை மற்றும் தொடர்புடைய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை தற்போதைய 28 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக ஜிஎஸ்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விலை உயர்வு: மொத்தத்தில், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு 148 பொருட்களுக்கான வரி விகிதங்களை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஆலோசனை செய்யப்படும் இறுதி செய்யப்படும். ஜிஎஸ்டி கவுன்சில் முடிவிற்கு பிறகே இந்த வரி விகிதங்கள் அமலுக்கு வரும். புகையிலை மற்றும் தொடர்புடைய பொருட்கள் மற்றும் காற்றூட்டப்பட்ட பானங்கள் மீது 35 சதவீத சிறப்பு வரியை கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. பொருட்கள் மீது 5, 12, 18 மற்றும் 28 சதவிகிதம் என்ற நான்கு அடுக்கு வரி ஸ்லாப் எப்போதும் போல தொடரும். மேலும் 35 சதவிகிதம் சிறப்பு வரி என்ற புதிய வரி அறிமுகப்படுத்தப்படும். தற்போது, ஜிஎஸ்டி என்பது நான்கு அடுக்கு வரி அமைப்பாகும். இது போக சிறப்பு வரி கொண்டு வர வாய்ப்புள்ளது.

Related Post