மும்பை: இந்தியாவின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களைக் காட்டிலும் அதிக சொத்து மதிப்பு கொண்ட கிரிக்கெட் வீரராக அறியப்படுபவர் ஆர்யமான். இவரது சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ. 70 ஆயிரம் கோடியாகும். இவ்வளவு பெரிய கோடீஸ்வரரான ஆர்யமான் வெறும் 22 வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது உங்களுக்குத் தெரியுமா.. இது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். 1983ம் ஆண்டில் இந்தியா முதல்முறையாக உலகக் கோப்பையை வென்ற போது, நமது நாட்டில் ஆரம்பித்த கிரிக்கெட்டின் பாய்ச்சல் அதன் பிறகு நிற்கவே இல்லை..
கிரிக்கெட்: மேலும், கிரிக்கெட் என்பது பலரது வாழ்க்கையையும் இது புரட்டிப் போட்டு இருக்கிறது. ஏழ்மையான நிலையில் இருந்தவர்களும் கிரிக்கெட் மூலம் உச்சத்தை அடைந்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர், தோனி மற்றும் விராட் கோலி உள்ளிட்டோர் நாட்டின் மிகப் பெரிய பிராண்டுகளாகவே மாறிவிட்டனர். கிரிக்கெட்டை தாண்டி விளம்பர வருவாய், அது இது என்று இவர்களுக்கு வருமானம் கொட்டும். பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் கோடீஸ்வரர்களாகவே உள்ளனர்.
பணக்கார கிரிக்கெட் வீரர்: இப்படி பணமழை கொட்டினாலும் கூட அவர்கள் இந்தியாவின் பணக்கார லிஸ்டில் இடம்பெறுவதில்லை. ஆனால், இதுபோன்ற ஜம்பவான்களை பின்னுக்குத் தள்ளி ரூ. 70,000 கோடி நிகர மதிப்புடன் நமது நாட்டில் ஒரு கிரிக்கெட் வீரர் பணக்காரர்கள் லிஸ்டில் இருக்கிறார். அவர் தான் ஆர்யமான் பிர்லா.. பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லாவின் மகனான இவர் தான் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் என்றும் கூட சொல்கிறார்கள்.
ராஜஸ்தான் அணி: இரண்டு சீசன்கள் அவர் ராஜஸ்தான் அணியிலேயே இருந்தார். இருப்பினும், அவரால் பிளேயிங் 11இல் இடம்பிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் 2019ம் ஆண்டு அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஓய்வு: ஆர்யமான் பிர்லா இதுவரை ஒன்பது முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதத்துடன் 414 ரன்கள் அவர் குவித்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டை பொறுத்தவரை, அவர் நான்கு போட்டிகளில் விளையாடி, 36 ரன்கள் எடுத்துள்ளார். இதுபோல தொடக்கத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்தாலேயே ராஜஸ்தான் அணி கூட அவரை வாங்கியது.
இருப்பினும், கடந்த 2019ம் ஆண்டு தனிப்பட்ட காரணங்களால் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 22ஆகும். அதன் பிறகு சில மாதங்களில் அவர் குடும்ப பிஸ்னஸில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அவரது தங்கை அனன்யா பிர்லாவுடன் இணைந்து இப்போது குடும்ப தொழில்களை அவர் கவனித்து வருகிறார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage