கதாநாயகி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இந்த பிரபலம் தானா?

post-img

சென்னை: விஜய் டிவியில் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இருவரும் நடுவர்களாக பங்கு பெற்ற நிகழ்ச்சி கதாநாயகி முடிவுக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்ற தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்ததும் அவருக்கு புதிய சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். அது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.


விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் புதியது புதியதாக தொடங்கப்பட்டு வருகிறது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு அடுத்தடுத்து தங்களுடைய திறமையின் மூலமாக முன்னேறி போய்க்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பல பாடல் நிகழ்ச்சிகளும், டான்ஸ் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருக்கிறது. இந்த நிலையில் முதல் முறையாக அடுத்த கதாநாயகி யார் என்ற ஒரு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
விஜய் டிவி ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்ற பல பிரபலங்கள் சினிமாவில் மின்னிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் சிவகார்த்திகேயன், நடிகர் சந்தானம், கே பி ஒய் பாலா, தீனா, புகழ், மதுரை முத்து, ராமர் என பலருடைய பெயரை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் இப்போது பெண் கதாநாயகிகளை சின்னத்திரையில் அறிமுகப்படுத்தும் வகையில் கதாநாயகி என்ற நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
அதில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தில் இருந்த பல பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் ஒரு சிலர் மட்டும்தான் தேர்வாகி இருந்தனர். அவர்களில் 8 முன்னணி போட்டியாளர்கள் கதாநாயகி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அடுத்தடுத்த டாஸ்க் கொடுக்கப்பட்டது.
 இயற்கை உபாதைகள் போகும்போது கூட இயக்குனர் கேட்ட கேள்வி..! வேதனையை பகிர்ந்த பூவே உனக்காக சீரியல் நடிகை
அதே நேரத்தில் இதில் வெற்றி பெறுபவர்கள் விஜய் டிவியில் அடுத்த நிகழ்ச்சியில் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. அதனால் இதில் பல்வேறு துறையை சார்ந்தவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை கே எஸ் ரவிக்குமார் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் நடுவராக இருந்து போட்டியாளர்களுக்கு மேலும் நடிப்பு திறமையை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில தினங்களில் ஒளிபரப்பாக இருப்பதால் இந்த நிகழ்ச்சி விரைவாக முடிவுக்கு வந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கதாநாயகி பட்டத்தை இரட்டை சகோதரிகளான ரூபினா மற்றும் ரூபிசீனா ஆகியோர் பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்களில் ஒருவர் காற்றுக்கென்ன வேலி சீரியலின் மூலம் பிரபலமான நடிகர் சுவாமிநாதன் கதாநாயகனாக நடிக்கும் சீரியலில் ஜோடியாக நடிக்க இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Related Post