ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 144 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 68வது அரைசதத்தை பதிவு செய்தார். இதனால் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனை முதல்வன் படத்தில் ரகுவரன், "என்னைய சமாளிக்கவே முடியலைல" என்ற வசனத்தை ஸ்டீவ் ஸ்மித் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்து அணி பேஸ்-பால் யுக்தி மூலம் அதிரடியாக வெற்றிகளை குவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய நாளின் கடைசி செஷனில் பேஸ்-பால் யுக்தியை பின்பற்றுவதை போலவே ஆஸ்திரேலிய அணியின் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித் விளையாடினர். இதனால் 10 ஓவர்களில் 53 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனை கத்தி படத்தில் விஜயை பார்த்து முதியவர் ஒருவர், "நீ ஏமாத்துறதுக்கு நாங்கதான் கிடைச்சோமாடா" என்று அழுதுகொண்டே கேட்பார். அதனை மாற்றி, இந்திய பவுலர்கள், "உனக்கு பேஸ்-பால் பழகுறதுக்கு நாங்கதான் கிடைச்சோமாடா" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.
நேற்றைய நாளில் களமிறங்கியது முதலே ஆஸி. அணியின் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார். இதனால் விரைவாக சதமும் விளாசி அசத்தினார். ஆட்ட நேர முடிவில் 156 பந்துகளில் 146 ரன்கள் விளாசி களத்தில் இருந்தார். இதனை நானும் ரவுடி தான் படத்தில், "அள்ளிப்போட்டு கொண்டு வந்தேன் சார்" என்று விஜய் சேதுபதி சொல்லுவார். அதனை மாற்றி, "என்னய்யா டெஸ்ட்-ல ஒருநாள் நாக் ஆடிட்டு இருக்க" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ்.
அதேபோல் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியதால் இந்திய அணியில் அஸ்வின் களமிறக்கப்படவில்லை. ஆனால் ஷமி, சிராஜ், தாக்கூர் மற்றும் உமேஷ் யாதவ் என்று 4 பேரும் விக்கெட்டை வீழ்த்த திணறினர். இதனால் வீரம் படத்தில் காதலியை கழற்றிவிட்டு கஷ்டப்படும் சந்தானம், "உங்கள் நம்பி என் அளமேலுவ வேற கழற்றிவிட்டுட்டேனே" என்று சொல்லுவார். அதனை மாற்றி ரோகித் சர்மா புலம்புவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நக்கல்.