நியூயார்க்: மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் விரைவில் தனது சொத்துக்களை எல்லாம் இழந்து விரைவில் திவால் ஆகப் போகிறார் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனம் இதுவரை உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக மாறினால் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் சொத்துக்களை இழந்து திவாலாகிவிடும் நிலை ஏற்படலாம் என்று டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் கூறி உள்ளார். அவர்களிடையே 2022 இல் பெரிய அளவில் மோதல் நிலவியது.
அந்த பழைய சண்டை மீண்டும் இருவருக்கும் இடையில் ஏற்பட்டு உள்ளது. டெஸ்லாவின் சந்தை மதிப்பு $1.251 டிரில்லியன் ஆகும், இது $3.729 டிரில்லியன் சந்தை மதிப்பு கொண்ட Apple Inc ஐ விட மிகவும் பின்தங்கியுள்ளது. அதே சமயம் டிசம்பர் 11, 2024 நிலவரப்படி, மைக்ரோசாப்டின் சந்தை மூலதனம் அல்லது சந்தை மதிப்பு $3.316 டிரில்லியன் ஆகும்.
டெஸ்லா இவர்களுக்கு கீழ்தான் உள்ளது. இருந்தாலும் பில் கேட்ஸ் சொத்துக்களை இழந்து திவாலாகிவிடும் நிலை ஏற்படலாம் என்று டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் கூறி உள்ளார். இதன் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகளை மஸ்க் எங்கே ஷார்ட் செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. 2022ல் பில் கேட்ஸ் டெஸ்லா பங்குகளை ஷார்ட் செய்தார். அதை இப்போது எலோன் மஸ்க் செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதாவது ஒரு நிறுவனத்தின் பங்குகள் சரிய போகிறது என்று கூறி அந்த விஷயத்தில் முதலீடு செய்வதே ஷார்ட் செய்வது ஆகும். அப்படித்தான் எலான் மஸ்க் செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதன் மூலம் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் விரைவில் தனது சொத்துக்களை எல்லாம் இழந்து விரைவில் திவால் ஆகப் போகிறார் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஏற்கனவே doge அமைப்பின் தலைவராக மஸ்க் நியமிக்கப்பட்டதில் இருந்தே அவரின் பங்குகள் உயர்ந்து வருகின்றன.
பங்குகள்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. எலான் மஸ்க்கிற்கு அரசாங்கத் திறன் துறை ("DOGE") தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளார். இதன் மூலம் அரசில் உள்ள பல நிர்வாகிகளை எலான் மஸ்க் விரைவில் நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கையில் எடுத்த போது.. அதில் இருந்த பலர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மஸ்க் அரசு நிர்வாகத்திலும் பலரை நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க் இந்த முறை நேரடியாக டிரம்பிற்கு தேர்தலில் ஆதரவு கொடுத்தார். ஒரு காலத்தில் தீவிர ஜனநாயக கட்சி ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். கடந்த சில வருடங்களாக அவரின் அரசியல் கொள்கை வலதுசாரியாக மாறிவிட்டது.
முக்கியமாக பல விஷயங்களில் தற்போதைய அதிபர் பிடனுக்கும்.. அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் எதிரான முடிவுகளை எலான் மஸ்க் எடுத்துள்ளார். இவர்களை கடுமையாக எலான் மஸ்க் எதிர்த்து வந்துள்ளார். இந்த முறை டிரம்ப்பை எலான் மஸ்க் ஆதரித்துள்ளார். இந்த நிலையில்தான் அவரின் பங்குகள் வேகமாக உயரத்தொடங்கி உள்ளன.