தங்க நகை 23 சவரன்.. திருப்பத்தூர் பேங்க்கில் திகைப்பு.. அதைவிடுங்க, 14 சவரன் நகைகளால் குஷியான நெல்லை

post-img
திருப்பத்தூர்: திருப்பத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களில் நடந்த இருவேறு தங்க நகை திருட்டு சம்பவமானது, பொதுமக்களுக்கு ஆச்சரியத்தையும், மறுபுறம் கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை பகுதியில் ஜோலார்பேட்டை கூட்டுறவு நகர வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, சரண்யா (54) என்பவர் வந்திருந்தார். ஜோலார்பேட்டை கூட்டுறவு நகர வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையில் உள்ள 74வது பாதுகாக்கப்பு பெட்டகத்தில், தன்னுடைய 7 சவரன் தங்க நகையை ஒரு பாக்ஸிலும், 23.1/2 சவரன் தங்க நகையை மற்றொரு பாக்ஸிலும் என 2 பாக்ஸில் மொத்தமாக 30.1/2 சவரன் தங்க நகையை வைத்துவிட்டு சென்றார். இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால், 2 நாட்களுக்கு முன்பு சரண்யா ஜோலார்பேட்டை கூட்டுறவு நகர வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட தன்னுடைய நகையை எடுப்பதற்காக வந்திருந்தார் சரண்யா. அப்போது அவருடைய பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட 2 பெட்டிகளில், வெறும் சவரன் தங்க நகை இருந்த பெட்டி மட்டும் இருந்துள்ளது. பேங்க் மேனேஜர்: 23.1/2 சவரன் தங்க நகை வைக்கப்பட்ட பெட்டி காணாமல் போயிருந்தது.. இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா, உடனடியாக பேங்க் மேனேஜர் திருஞானசம்பந்திடம் இது குறித்து கேட்டதற்கு, எனக்கு தெரியாது என்று அலட்சியமாக சொன்னாராம். இதனால் வங்கி மேலாளருக்கும், சரண்யாவுக்கும் வாக்குவாதம் வெடித்துள்ளது.. பின்னர் சரண்யா, வங்கி லாக்கரில் வைத்திருந்த பணத்தை மீட்டு தருமாறு ஜோலார்பேட்டை போலீசில் புகார் தந்தார். போலீசாரும் இந்த புகாரின் பேரில், வழக்குபதிவு செய்து விசாரணையை துவங்கி நடத்தி கொண்டிருக்கிறார்கள். லாக்கர்: வீட்டில் தங்க நகை வைத்தால் கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்று விடுவார்களோ என்று பயந்துதான், பாதுகாப்பாக, வங்கி லாக்கரில் கொண்டு போய் வைக்கப்படுகிறது. ஆனால், லாக்கரிலேயே நகைகள் மாயமானது, திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு கிலியை தந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், கொள்ளையடித்த நகையை கொள்ளையர்களே கொண்டுவந்து வைத்துவிட்டு போன ஆச்சரிய சம்பவம் திருநெல்வேலியில் நடந்துள்ளது. கூடங்குளம் அருகே இடிந்தகரையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ்.. இவர் ஒரு மீனவர்.. சம்பவத்தன்று தன்னுடைய வீட்டை பூட்டாமல் கதவை மட்டும் சாத்திவிட்டு, சர்ச்சுக்கு சென்றிருக்கிறார்.. பிறகு மதியம் சர்ச் முடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த, 14 சவரன் நகைகள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் கூடங்குளம் போலீசில் புகார் தரவும், இதுகுறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். ஆச்சரியம்: இதற்கிடையே, வீட்டுக்குள் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இருப்பதை கண்டு பிரான்சிஸ் ஆச்சரியப்பட்டுள்ளார்.. நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களே, மறுபடியும் நகை முழுவதையும் வீட்டுக்குள் வீசி சென்றிருக்கிறார்கள்.. நகை திரும்ப கிடைத்ததால் பிரான்சிஸ் மகிழ்ச்சி அடைந்தாலும், நகைகளை கொள்ளையடித்தவர்கள் யார் என்று தெரியவில்லை. இந்த நகைகள் மறுபடியும் எப்படி வந்தது என்றும் தெரியவில்லையாம். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post