நாடு முழுவதும் உள்ள அனைத்து வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 200 ரூபாய் குறைத்தும், உஜ்வாலா திட்ட பயனாளிகளின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 400 ரூபாய் குறைத்தும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், ரக்ஷாபந்தன் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி மக்களுக்கு பரிசாக இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு குறித்து பேசிய தென்காசி மக்கள், சிலிண்டரின் விலை குறைப்பு மிகவும் வரவேற்கக் கூடியது என்றும், சிலிண்டரின் மானிய விலையை இன்னும் அதிகப்படுத்தினால் எளிய மக்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்றும், தொழில் நலிவடைந்து வரும் சூழலில் விலைவாசி மற்றும் சிலிண்டரின் விலை மட்டும் அதிகரித்துக் கொண்டே போவதாகவும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதி மக்களின் கருத்துக்களாக இருந்து வருகிறது.