ராதிகாவின் புதிய சீரியல் ரெடி... எந்த சேனலில் தெரியுமா?

post-img

முன்னெப்போதையும் தற்போது பல சீரியல்கள் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த வரிசையில் பொதிகை சேனல் ‘தாயம்மா’ என்ற புதிய தமிழ் சீரியலை விரைவில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.

சின்ன மாப்ளை, பொன் விளையும் பூமி போன்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் அத்தொலைக்காட்சி, தினசரி தொடரான 'தாயம்மா'வை விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இது குடும்பத்தை மையப்படுத்திய கதையாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தாயம்மா சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் அவர் இரண்டு மகள்களின் தாயாக நடிக்கிறார்.

விருது பெற்ற நடிகை ராதிகா தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பல்வேறு படங்களில் தனது சிறப்பான நடிப்பிற்காக அறியப்படுகிறார். தொழில் வாழ்க்கையில், கிழக்கே போகும் ரயில் மூலம் அறிமுகமானார். மீண்டும் ஒரு காதல் கதை, தர்ம தேவதை (1986), நீதிக்கு தண்டனை (1987), மற்றும் கேளடி கண்மணி (1990) போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களில் நடித்தார் ராதிகா. சமீபத்தில் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தில் நடித்திருந்தார்.

தாயம்மா சீரியலில் ராதிகா சரத்குமார் மற்றும் வேணு அரவிந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹரிஷினி, அர்ஜுன், பூவிலங்கு மோகன், ராணி, தாட்சாயணி, மற்றும் பார்கவி ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இதனை விக்ரம் ஆதித்யன் இயக்குகிறார்.

 
 

Related Post