டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போராளி குழுக்களிடம் சரண் அடையும்படி வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 50 வருட ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவில் இருந்து அதிபர் பஷர் அல் ஆசாத் விமானத்தில் ரகசியமாக தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்தனை காலமாக அங்கே பல போராளி அமைப்புகள் அங்கே சிரியா அரசை எதிர்த்து போராடி வந்தன. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிகம் அறியப்படாத ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) என்ற குழு அங்கே வெற்றி அடைந்து உள்ளது. இது கிட்டத்தட்ட மிகப்பெரிய அரபு புரட்சியாக பார்க்கப்படுகிறது.
ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக அல் கொய்தா போராடியது பலருக்கும் தெரியும். அந்த அல் கொய்தாவில் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி என்பவரால் HTS உருவாக்கப்பட்டது. அபு முகமது அல்-ஜோலானி மிகவும் இளம் தலைவர் என்றாலும் அவருக்கு ராணுவ ரீதியாக நிறைய அறிவு உள்ளது. அதேபோல் அரசியல் ரீதியாகவும் நிறைய அறிவு உள்ளது.
இதன் காரணமாகவே அபு முகமது அல்-ஜோலானி HTS குழுவை உருவாக்கிய சில வருடங்களில் அவருடன் மற்ற போராளி குழுக்கள் இணைந்தன. அபு முகமது அல்-ஜோலானி அல் கொய்தாவின் சிரிய துணை அமைப்பான ஜபத் அல்-நுஸ்ராவை என்ற அமைப்பை நடத்தி வந்தார். 2016 இல் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் ஏற்பட்ட கருத்தியல் வேறுபாடுகள் காரணமாக ஜோலானி 2017 HTS அமைப்பை உருவாக்கினார்.
அவருடன் தற்போது 10க்கும் மேற்பட்ட போராளி குழுக்கள் கைகோர்த்து உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி முடிவிற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை கிட்டத்தட்ட 50 வருடங்களாக போராடி வருகிறது. அந்த போர் இன்று ஆசாத் வீழ்ச்சி காரணமாக முடிவிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் இப்போது ரகசிய இடத்திற்கு சென்றுவிட்டார்.. ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்துவிட்டார் என்று செய்திகள் வருகின்றனர். அவர் தனி விமானத்தில் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தலைநகர் சுற்றி வளைக்கப்பட்டதால் அவர் தலைநகரை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
அதோடு அந்நாட்டு ராணுவத்தின் முக்கிய தலைவர்களும் நாட்டை விட்டு ஓடிவிட்டன. போராளி குழுக்களிடம் சரண் அடையுங்கள்.. இல்லை நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்று தனது ராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
வெற்றி: சிரியாவில் அந்நாட்டு அரசுக்கு எதிராக பல அமைப்புகள், போராளிகள் போராடி வருகின்றன. அங்கே அரசுக்கு எதிராக பல போராளி குழுக்கள் குழு குழுவாக போராடி வருகின்றன. அதில் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) அமைப்பின் தலைமையின் கீழ் கிட்டத்தட்ட 10 குழுக்கள் போராடி வருகின்றன. இந்த ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) குழுக்கள்தான் அங்கே சிரியாவை கைப்பற்ற தொடங்கி உள்ளன.
ஈராக், ஜோர்டான் மற்றும் லெபனான் எல்லையில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய மாகாணமான ஹோம்ஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற போராளிக் குழு சனிக்கிழமை கூறியது.
கடந்த நவம்பர் 27ம் தேதிதான் இவர்கள் அரசுக்கு எதிரான போரை அறிவித்தனர். அதற்குள் அங்கே மிகப்பெரிய வெற்றியை அந்த அமைப்பு பதிவு செய்துள்ளது.
இப்போது வரை அந்நாட்டு தலைவர், ராணுவம், தலைநகரில் உள்ள செய்தி சேனல்கள், அரசு கட்டிடங்கள் போராளி குழுக்கள் கையில் உள்ளது. அடுத்த சில நிமிடங்களில் பாராளுமன்றம் உள்ளேயும் அவர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Weather Data Source: Wettervorhersage 21 tage