சென்னை: யூடியூபர் ஜாரா டார் தனது பிஎச்டி படிப்பை கைவிட்டுவிட்டு ஒன்லி ஃபேன்ஸ் கணக்கு தொடங்கியது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. ஒரு பிஎச்டி படிக்க கூடியவர்.. ஆராய்ச்சியாளர்.. படிப்பை உதறிவிட்டு ஒன்லி ஃபேன்ஸ் கணக்கு தொடங்கியது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஒன்லி ஃபேன்ஸ், 2016 இல் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் பிரபலமாக இருந்தாலும்.. இது பிரிட்டிஷ் சந்தா அடிப்படையிலான தளமாகும். இதை எளிதாக விளக்க வேண்டும் என்றால் "A" என்ற நடிகையை எடுத்துக்கொள்வோம். "A" என்ற நடிகை இன்ஸ்டாகிராமில் இருக்கிறார். அவர் அதில் புகைப்படங்களை போடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
இப்போது அவரின் புகைப்படங்களை எல்லோரும் பார்க்கலாம். அதை பார்க்க நெட்டிசன்கள் பணம் கொடுக்க வேண்டியது இல்லை. ஆனால் இப்போது அதே நடிகை "A".. நான் இன்னும் பல புகைப்படங்களை போட போகிறேன். அதை எல்லோரும் பார்க்க முடியாது. சில நெருக்கமான ரசிகர்கள் மட்டுமே பார்க்கலாம். ஆனால் அதற்கு காசு கொடுக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
அதாவது "A" என்ற அந்த நடிகை வேறு சில exclusive புகைப்படங்களை வெளியிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அல்லது சில அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுகிறார் என்றும் வைத்துக்கொள்வோம். இந்த புகைப்படங்களை பார்க்க மாதம் ரூ. 300 கொடுக்க வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? சரி.. 10 ஆயிரம் பேர் இதை ஏற்றுக்கொண்டு அந்த "A" என்ற நடிகைக்கு சப்ஸ்கிரைப் செய்கிறார்கள் என்றால் 3000000 ரூபாய் அதாவது 30 லட்சம் வருமானம் ஈட்ட முடியும். இந்த தொகை உதாரணம்தான் ஒன்லி ஃபேன்ஸ் வழியாக பெண்கள் பலர் பல கோடிகளை மாதங்களில் சம்பாதிக்கிறார்கள். இதில் ஒன்லி ஃபேன்ஸ் செயலிக்கு கட்டணமாக குறிப்பிட்ட தொகை சர்வீஸ் சார்ஜ் கொடுக்க வேண்டும்.
ஒன்லி ஃபேன்ஸ் இப்படித்தான் செயல்படுகிறது. ஒன்லி ஃபேன்ஸ் இந்தியாவில் தடை இல்லை. ஆனால் இந்தியாவில் அவ்வளவு பிரபலம் இல்லை. அமெரிக்காவில் சிலர் பெண்களின் கால், கை போன்ற சாதாரண பாகங்களை பார்க்க கூட பல லட்சம் வழங்கும் வழக்கம் உள்ளது.
யூடியூபர் ஜாரா டார்:
இப்படிப்பட்ட நிலையில் தான் யூடியூபர் ஜாரா டார் ஒன்லி ஃபேன்ஸ் செயலியில் இணைந்து உள்ளார். யூடியூபர் ஜாரா டார் பிரபல ஆராய்ச்சியாளர் ஆவார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை செய்து வந்தார். அதை தனது யூ டியூப் பக்கத்தில் பதிவும் செய்து வந்தார். அதோடு பெண்ணிய கருத்துக்கள் தொடர்பாக போராடி வீடியோ போட்டு வந்தார்.
பெண்கள் கல்வி பெற வேண்டும், உயர்கல்விக்கு செல்ல வேண்டும், ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும் என்று பெண்ணியம் போராடி வருகிறது. அதோடு பெண்களை உடல் ரீதியாக உபயோகிப்பதை பெண்ணியம் எதிர்த்து வருகிறது. இந்த பெண்ணியத்தை பேசி வந்த அதே ஜாரா டார் தனது பிஎச்டி ஆராய்ச்சியை நிறுத்திவிட்டு ஒன்லி ஃபேன்ஸ் செயலியில் இணைந்து உள்ளார்
பாகிஸ்தான் இந்தியா என்ற இரண்டு நாடுகளிலும் உறவினர்களை கொண்ட ஜாரா டார் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இவர் ஓன்லி ஃபேன்ஸ் கணக்கு தொடங்கி ஒரு சில மாதத்தில் மாதம் 8 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட தொடங்கி உள்ளார்.
தற்போது இவருக்கு 1 லட்சம் subscribers உள்ளனர். தனக்கு இதற்கு மேல் கல்வியில் விருப்பம் இல்லை. எனக்கு விருப்பப்பட்ட வாழ்க்கை, பொருளாதார பின்புலம் கிடைக்கிறது. இந்த வாழ்க்கையை கொடுத்த ஒன்லி ஃபேன்ஸ் செயலுக்கு நன்றிகள் என்று ஜாரா கூறியுள்ளது பலரிடமும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது.
இங்கேயும் பிரபலம்:
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பிரபலமாக இருக்கும் ஒன்லி ஃபேன்ஸ் கலாச்சாரம் இந்தியாவிலும் பிரபலம் அடைய தொடங்கி உள்ளது. வேறு வேறு செயலிகள் வழியாக இந்த கலாச்சாரம் பெண்கள் இடையே அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் இன்ஸ்ட்டா சப்ஸ்கிரிப்ஷன் போன்ற செயல்பாடுகள் மூலம் பல பெண்கள் பணம் பெற தொடங்கி உள்ளனர்.
முக்கியமாக இப்போது இன்ஸ்ட்டாவில் பிரபலமாகி இருக்கும் அரோரா சின்கிளேர் என்ற பெண் தனது exclusive புகைப்படங்களை பார்க்க 390 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளார். இவரை 7 ஆயிரம் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதன் மூலம் அவர் மாதம் 25 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.