பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அஸ்திரத்தை மீண்டும் கையில் எடுக்கத் தொடங்கி இருக்கிறது. பாஜகவின் இந்த திட்டம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் இன்று மற்றும் நாளை மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜக திட்டமிட்டு வருவதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து கூறி வருகின்றனர். இதனால் தேசிய அளவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
முதல்வர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், லோக்சபா தேர்தல் திட்டமிட்ட நேரத்தில் நடக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கடந்த ஏழு மாதங்களாக நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதை சிலர் நாட்டில் எதையும் செய்யும் திறன் கொண்டவர்கள். எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கலாம்.
நாங்கள் மும்பைக்குச் செல்கிறோம், நாட்டின் அதிகபட்ச எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலை என்னிடம் உள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பதவியிலும் விருப்பமில்லை. லோக்சபா தேர்தல் இந்த வருடம் முன்கூட்டியே நடக்கலாம். அதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன, என்று கூறி வருகின்றனர்.
ஒரே தேர்தல்: அதாவது இந்த வருட இறுதியிலேயே லோக்சபா தேர்தல் வரலாம் என்கிறார்கள். 5 மாநில தேர்தல்களோடு சேர்ந்து இந்த தேர்தல் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய அரசு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வரும் நிலையில்தான் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்து வருகிறது.
இன்னொரு பக்கம் பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அஸ்திரத்தை மீண்டும் தீவிரமாக கையில் எடுக்கத் தொடங்கி இருக்கிறது. அதன்படி 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குவார்.
ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே ரேஷன் வரிசையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முழக்கத்தை பாஜக தற்போது எடுத்திருக்கிறது. செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ள நிலையில்தான் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.
குழப்பம்: நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் தனியாக நடக்காமல் ஒரே அடியாக நடப்பதே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆகும். அனைத்து மாநிலங்களிலும் சட்ட சபைகளை கலைத்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டசபை தேர்தலையும் நடத்துவது தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் நோக்கம். அல்லது கொஞ்சம் கொஞ்சமாக மாநில தேர்தல்களை நாடாளுமன்ற தேர்தல்களோடு இணைப்பதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்.
இதன் காரணமாக பெருமளவில் பொருட் செலவு குறையும் என பாஜகவும் தேர்தலை நடத்த தயார் என தேர்தல் ஆணையம் கூறி இருப்பதும் கவனிக்கத்தக்கது. அதே நேரத்தில் பல சிக்கல்களும் இந்த திட்டத்தில் இருக்கின்றன. பல மாநிலங்களில் ஆட்சியை நீட்டிக்க வேண்டி இருக்கும் அல்லது முன்கூட்டியே கலைக்க வேண்டி இருக்கும்.
நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த பின் சட்டசபை கலைக்கப்பட்டால் என்ன ஆகும். மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தால் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. உதாரணமாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்து, மாநிலத்தில் வேறு ஒரு ஆட்சி வந்து சில காலத்தில் மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தால் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரை காத்திருக்க வேண்டுமா கேள்வி எழுந்துள்ளது. இதை எப்படி பாஜக சமாளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.