சென்னை: இன்ஃபோசிஸின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்வது குறித்த மீண்டும் அறிவுறுத்தி உள்ளார். நாராயண மூர்த்தி, நாம் கடினமாக உழைத்து இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வர கடுமையாக உழைக்க வேண்டும்.. இதற்காக விடாமல் உழைக்க வேண்டும் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
கொல்கத்தாவில் இந்திய வர்த்தக சபையின் நூற்றாண்டு விழாவில் பேசிய நாராயண மூர்த்தி, இந்தியாவில் இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். நாம் மிக சரியான காலத்தில் உள்ளோம். இது போன்ற சாதகமான சூழ்நிலை அமைவது கடினம். இந்த இளைஞர்கள் பலத்தை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இன்ஃபோசிஸ் உருவாக்கிய போது அதை உலக தரத்திற்கு கொண்டு செல்வோம். உலகின் சிறந்த நிறுவனங்களுடன் போட்டி போட வைப்போம் என்று கூறினேன். இன்ஃபோசிஸ் நிறுவனத்தை சிறந்த உலகளாவிய நிறுவனங்களுடன் ஒப்பிடும் அளவிற்கு மாற்றுவேன் என்று சொன்னேன். அதற்காக உழைத்தேன்.
சிறந்த உலகளாவிய நிறுவனங்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு நான் சும்மா இல்லை.. அதற்காக உழைத்தேன்.. 800 மில்லியன் இந்தியர்கள் இலவச ரேஷன் பெறுவதோடு இருக்க கூடாது. கடினமாக உழைக்க வேண்டும். 10 மணி நேரத்திற்கும் மேல் இருக்க கூடாது.
இந்தியாவில் 800 மில்லியன் இந்தியர்கள் வறுமையில் உள்ளனர். நாம் கடினமாக உழைக்கும் நிலையில் நாம் முன்னேற முடியும். நாம் கடினமாக உழைத்து இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வர கடுமையாக உழைக்க வேண்டும், என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வாரத்திற்கு நாம் 40 டூ 48 மணி நேரம் வேலை பார்க்கிறோம். அது சரியாக இருக்காது. நாம் வேலை நேரத்தை 70 மணி நேரமாக உயர்த்த வேண்டும். தந்தை அந்த நேரத்தில் நாட்டில் நிகழ்ந்து கொண்டிருந்த அசாதாரண முன்னேற்றத்தைப் பற்றி பேசுவார், 70 களின் முற்பகுதியில் பாரிஸில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது, நான் குழப்பமடைந்தேன். இந்தியா எவ்வளவு அசுத்தமானது, ஊழல் நிறைந்தது என்று மேற்குலகம் பேசிக்கொண்டிருந்தது. என் நாட்டில் வறுமை இருந்தது, சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தது
ஆனால் நான் கடுமையாக உழைத்தேன். இன்போசிஸ் நிறுவனத்தை மேலே கொண்டு வர வேண்டும் என்பதற்காக மிக கடுமையான பணிகளை செய்தேன். நாம் இப்போதும் அதே சூழலில்தான் இருக்கிறோம்.
மேற்கு உலக நாடுகளை விட புதிய உயரத்திற்கு நம்மை கொண்டு செல்ல வேண்டும். வாரத்திற்கு நாம் 40 டூ 48 மணி நேரம் வேலை பார்க்கிறோம். இனி வேலை நேரத்தை உயர்த்த வேண்டும். நம்முடைய இந்திய கலாச்சாரம் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதை மறக்க கூடாது. இந்த கலாச்சாரம் மீண்டும் சர்வதேச அளவில் உச்சம் அடைய வேண்டும்.
சர்வதேச அளவில் பெரிய நாடாக மாற வேண்டும். வறுமையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். அதற்கு நாம் தினமும் உழைக்க வேண்டும். வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 10- 12 மணி நேரமாக உயர்த்த வேண்டும். கணக்கு பார்க்காமல் உழைக்க வேண்டும், என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.