திக்குமுக்காடி போன உலக அரசியல்! டிரம்ப் வந்த நேரம்.. அடுத்தடுத்து கவிழும் உலக அரசுகள்! என்ன நடக்குது

post-img

நியூயார்க்: உலக அரசியலில் அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் மாற்றங்கள் நடந்து வருகின்றன. உலக அளவில் பல நாடுகளில் உள்நாட்டு அரசியல் மோதலும், நாடுகளுக்கு இடையிலான அரசியல் மோதலும் உச்சம் அடைந்துள்ளது. உலக அரசியல் நாளுக்கு நாள் பரபரப்பின் உச்சத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போராளி குழுக்களிடம் சரண் அடையும்படி வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 50 வருட ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவில் இருந்து அதிபர் பஷர் அல் ஆசாத் விமானத்தில் ரகசியமாக தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்தனை காலமாக பல போராளி அமைப்புகள் அங்கே சிரியா அரசை எதிர்த்து போராடி வந்தன. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிகம் அறியப்படாத ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) என்ற குழு அங்கே வெற்றி அடைந்து உள்ளது. இது கிட்டத்தட்ட மிகப்பெரிய அரபு புரட்சியாக பார்க்கப்படுகிறது.
ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக அல் கொய்தா போராடியது பலருக்கும் தெரியும். அந்த அல் கொய்தாவில் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி என்பவரால் HTS உருவாக்கப்பட்டது.

அவருடன் தற்போது 10க்கும் மேற்பட்ட போராளி குழுக்கள் கைகோர்த்து உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி முடிவிற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை கிட்டத்தட்ட 50 வருடங்களாக போராடி வருகிறது. அந்த போர் இன்று ஆசாத் வீழ்ச்சி காரணமாக முடிவிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் கவிழ்ந்தது: அரசியல் நெருக்கடி காரணமாக பிரான்ஸ் அரசு கவிழ்ந்து உள்ளது. பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால் அரசு கவிழ்ந்தது. அதிபர் இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரதமர் மைக்கேல் பார்னியர் தோல்வி அடைந்ததை அடுத்து, பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது. அவர் அதிபர் இம்மானுவேல் மக்ரோனால் நியமிக்கப்பட்ட மூன்று மாதங்களில் ஆட்சி கவிழ்ந்து உள்ளது.

சர்ச்சைக்குரிய வகையில் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தியது, வரவு செலவில் முறைகேடுகளை செய்ததாக கூறி அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1962-க்குப் பிறகு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் நாட்டின் அரசாங்கம் கவிழ்வது இதுவே முதல் முறையாகும்.
தென்கொரியா: சமீபத்தில்தான் தென்கொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தென்கொரிய அதிபர் வெளியிட்டுள்ளார்.
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியவில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தொலைக்காட்சியில் தோன்றி தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் அறிவித்தார். ஜனநாயக நாடான தென்கொரியாவில் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதன்பின் அதை அவர் வாபஸ் வாங்கினார்.
அவரின் அவசர நிலை அறிவிப்பிற்கு சொந்த கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் யாருடைய ஆதரவும் இல்லாததால் அவசர நிலை திரும்ப பெறப்பட்டது.

Related Post