திருமாவிற்கு எவ்வளவு பிரஷருன்னு தெரியும்.. அவர் மனசு முழுக்க நம்மகிட்டதான் இருக்கு.. விஜய் பரபரப்பு

post-img

சென்னை; கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்போடு '200 வெல்வோம்' என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு... என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. இருமாப்போடு 200 தொகுதியிலும் வெல்வோம் என்று சொல்பவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று நடிகர் விஜய் பேசி இருக்கிறார்.
'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசிய சில விஷயங்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு கடுமையான தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்று சென்னையில் நடந்த எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்துகொண்டார் . பெரும் சர்ச்சைகள், விவாதங்களுக்கு இடையே இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அதன் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார்.
இதில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், விசிக தலைவர் திருமாவளவனால் இன்று வர முடியாமல் போய்விட்டது; அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க இனி நம்முடன் தான் இருக்கும்.
கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்போடு '200 வெல்வோம்' என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு... என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. இருமாப்போடு 200 தொகுதியிலும் வெல்வோம் என்று சொல்பவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்

நான் ஏன் மழை வெள்ளத்திற்கு நேரடியாக சென்று நிவாரணம் வழங்கவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். சம்பிரதாயத்துக்காக ட்வீட் போடறதும், அறிக்கை விடறதும், மழையில் நீரிலிருந்து போட்டோ எடுக்குறதும்... எனக்கு அதுல கொஞ்சம்கூட உடன்பாடில்ல.
மணிப்பூர் விவகாரத்தைக் கண்டே கொள்ளாமல் மத்தியில் ஆட்சியில் செய்துவருகிறார்கள். வேங்கைவயல் விஷயத்தில் இங்கிருக்கும் சமூக நீதி அரசும் ஒன்றும் செய்யவில்லையே... இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்திருந்தால் வெட்கித் தலைகுனிந்திருப்பார். ஜனநாயகத்தின் ஆணி வேரே சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்தான். தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் சுதந்திரமாகவும், நியாயமாகவும்தான் தேர்தல் நடக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்க வேண்டும் என தோன்றுகிறது. தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்துடன் நியமிக்கப்பட வேண்டும் என்பது எனது வலிமையான வேண்டுகோள் என்று விஜய் கூறியுள்ளார்.
திருமா விமர்சனம்: முன்னதாக திருமா இதை பற்றி செய்த விமர்சனத்தில், நடிகர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் என்பது ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், திடுமென ஒரு தமிழ் நாளேடு இதனை பெரிய செய்தியாக- தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.

திரு. விஜய் அவர்களின் கட்சி மாநாட்டுக்குப் பிறகு அவ்வாறு வெளியிட்டது. அதாவது,
"டிசம்பர்-06, விஜய் - திருமா ஒரே மேடையில்" என தலைப்புச் செய்தி வெளியிட்டு, ஒரு நூல் வெளியீட்டு விழாவைப் பூதாகரப்படுத்தி அந்நாளேடு அதனை அரசியலாக்கியது.
இது தான் அவ்விழாவைப் பற்றிய 'எதிரும் புதிருமான' உரையாடல்களுக்கு வழிவகுத்தது. பல்வேறு யூகங்களுக்கும் இடமளித்தது. குறிப்பாக, மரபு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் அவை கூட்டணி தொடர்பான உரையாடல்களாக அரங்கேறின.
ஒரு நூல்வெளியீட்டு விழாவாக, அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறியிருக்க வேண்டிய நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசியது அந்த நாளேடு தான். அது ஏன்? அந்த நாளேட்டுக்கு அந்தத் தகவல் எப்படி கிடைத்தது?
அதாவது, விகடன் பதிப்பகத்தில் ஒரு சிலருக்கும், 'விஓசி' நிறுவனத்தில் ஓரிருவருக்கும், அடுத்து எனக்கும் மட்டுமே அப்போதைக்குத் தெரிந்திருந்த அச்செய்தி, எப்படி அந்த நாளேட்டின் கவனத்துக்குப் போனது?
அதிகாரப்பூர்வமாக விகடன் பதிப்பகமோ, விஓசி நிறுவனமோ உறுதிப்படுத்தாத ஒரு செய்தியை அந்த நாளேடு ஏன் பூதாகரப்படுத்தியது? அதற்கு ஏன் திட்டமிட்டு அரசியல் சாயம் பூசியது?, என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Post