மத்திய பிரதேசத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்? பாஜக or காங்கிரஸ்? கருத்து கணிப்பு

post-img

சென்னை: மத்திய பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மை பெற்று வெற்றிபெறும் என்று பெரும்பான்மையான தேர்தலுக்கு கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன. காங்கிரசுக்கு படுதோல்வி என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறியுள்ளன.
மத்திய பிரதேசம் பொதுவாகவே பாஜக ஆதரவு மாநிலம். குஜராத்திற்கு அடுத்து.. ஏன் குஜராத்தை விட.. பாஜக ஆதரவு அதிகம் உள்ள மாநிலம் மத்திய பிரதேசம். பாஜகவின் கோட்டை என்று கூட இதை சொல்லலாம்.
மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த 4 முறையாக அங்கே பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. 3 முறையாக வரிசையாக அங்கே 2005ல் இருந்து 2013 வரை அங்கே பாஜக ஆட்சி செய்தது.
சிவராஜ் சிங் சவுகான் அங்கே ஆட்சி அமைத்தார். அதன்பின் கடந்த தேர்தலில் அங்கே காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆனால் 1 வருடத்தில் அங்கே கமல்நாத் ஆட்சியை ஜோதிராதித்யா சிந்தியா கவிழ்த்தார். இவர் பாஜகவில் இணைந்து தன்னுடன் சில எம்எல்ஏக்களையும் அழைத்து சென்று ஆட்சியை கவிழ்த்தார். இதன்பின் வந்த இடைத்தேர்தலில் பாஜக கூடுதல் எம்எல்ஏக்களை மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சிக்கு வந்தார்;.
இந்த நிலையில் இதில் மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது. வரும் டிசம்பர் 3ம் தேதி அங்கே தேர்தல் முடிவுகள் வர உள்ளன.
மொத்த கணிப்பு; மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 93-106 பாஜக 120-134மற்றவை 1-5 இடங்களில் வெல்லும். - அதாவது பாஜக ஆட்சி அமைக்கும். இங்கே 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும்
நியூஸ் 18: மத்திய பிரதேசத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் என்று நியூஸ் 18 கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இங்கே 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும். இந்த நிலையில் நியூஸ் 18 நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 116 இடங்களும், காங்கிரஸுக்கு 111 இடங்களும் மற்றவர்களுக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி-மேட்ரைஸ்: ரிபப்ளிக் டிவி-மேட்ரைஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், காங்கிரஸ் 97-107 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டு உள்ளது. பாஜக 118-130 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டு உள்ளது. இதர கட்சிகள் 0-2 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கடந்த முறை போல இந்த முறை போல அல்லாமல் இந்த முறை மத்திய பிரதேசத்தில் பாஜக வலிமையாக ஆட்சி அமைக்கும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த முறை போல ஆட்சி கவிழ்ப்பு, ஆபரேஷன் தாமரை போன்ற விஷயங்களுக்கு தேவை இருக்காமல் பாஜக நேரடியாக ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் உள்ள என்று கணிக்கப்பட்டு உள்ளது.
ஜான் கி பாத்: ஜான் கி பாத் கணிப்பில், காங்கிரஸ் 102-125 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டு உள்ளது. பாஜக 100-123 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டு உள்ளது. இதர கட்சிகள் 0-5 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.இதன் மூலம் கடந்த முறை போல இந்த முறையும் மத்திய பிரதேசத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் என்று கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
டுடேஸ் சாணக்யா: மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பாஜக கிளீன் ஸ்வீப் செய்யும், முழு மெஜாரிட்டி பெறும் என்று டுடேஸ் சாணக்யா தெரிவித்துள்ளது. பெரும்பாலும் துல்லியமாக கணிப்புகளை வெளியிடும் இந்த அமைப்பு காங்கிரஸ் கட்சி கடந்த முறையை விட குறைவான இடங்களை பெற்று படுதோல்வி அடையும் என்று கணித்துள்ளது. . அவர்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 151 ± 12 இடங்களும், காங்கிரஸுக்கு 74 ± 12 இடங்களும் மற்றவர்களுக்கு 5 ± 4 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது பாஜகவிற்கு கிளீன் வெற்றி என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியாவின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 140-162 இடங்களும், காங்கிரஸுக்கு 68-90 இடங்களும் மற்றவர்களுக்கு 0-3 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது பாஜகவிற்கு கிளீன் வெற்றி என்று கணிக்கப்பட்டு உள்ளது.
People's pulse : People's pulse எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள், மத்திய பிரதேசத்தை காங்கிரஸ் கட்சி தட்டித் தூக்கும் எனக் கணித்துள்ளது. People's pulse எக்சிட் போல் முடிவுகள்: காங்கிரஸ் 117-139 பாஜக 91-113 மற்றவை 0-8
டைம்ஸ் நவ் - ETG எக்சிட் போ: டைம்ஸ் நவ் - ETG எக்சிட் போல் கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் கட்சி 110-124 இடங்களைக் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாஜக 106-116 இடங்களைக் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் - ETG எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பின்படி, பந்தேல்கண்ட் பகுதியில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஜான் கி பாத்: ஜான் கி பாத் எக்சிட் போலில், பா.ஜ.க 100-123 இடங்களையும், காங்கிரஸ் 102-125 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறியுள்ளது. TV9 Bharatvarsh-Polstrat பா.ஜ.கவுக்கு 106-116 இடங்களும், காங்கிரஸுக்கு 111-121 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது. ரிபப்ளிக் டிவி-மேட்ரைஸ் பா.ஜ.கவுக்கு 118-130 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 97-107 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் டிவி9 போல்ஸ்ட்ராட் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு விவரம்: மொத்த தொகுதிகள்: 230 காங்கிரஸ்: 111 - 121 பாஜக: 106 - 116 மற்றவை: 0 - 6 மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை.

 

Related Post