அமெரிக்காவில் தொடரும் கொடூரம்.. பள்ளியில் துப்பாக்கிச்சூடு.. 3 பேர் உயிரிழப்பு

post-img
வாஷிங்டன்: அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பள்ளியில் நடந்த துப்பாக்கிசூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மெடிசன் பகுதியில் உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் அதே பள்ளியில் பயின்று வந்ததாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள பள்ளியில் , 17 வயது நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய 17-வயது நபரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சுமார் 400 பேர் படித்து வரும் பள்ளியில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு, பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் அதே பள்ளியில் பயின்று வந்ததாக சொல்லப்படுகிறது. துப்பாக்கிசூடு நடத்தியவர் ஆணா, பெண்ணா என்ற விவரம் எதையும் முதலில் அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியது 17 வயது மாணவி என்று சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்று துப்பாக்கிச்சூடு நடத்துவது பெரும்பாலும் ஆண்கள்தான். இதுவரை 3 சதவீத பென்களே இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக மட்டும் போலீசார் கூறியுள்ளனர். பள்ளியில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் குறித்து முன்னாள் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "இன்று மிகவும் துயரமான நாள். மாடிசன் நகருக்கு மட்டும் இல்லை. ஒட்டுமொத்த நாட்டிற்கும் துயரமான நாள். இந்த கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் பாதிப்புக்குள்ளான நபர்தான். துப்பாக்கிச்சூடு போன்ற அதிர்ச்சி சம்பவங்கள் ஒருபோதும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகாது" என்றார்.

Related Post