சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூன்றாவது செயலாளராக இருக்கிறார் அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ். குழந்தையின் படிப்பு தொடர்பாக 136 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார் இவர். இதற்கான அரசாணை கடந்த 10 நாட்களுக்கு முன்பு போடப்பட்டுள்ளது.
நீண்ட நாள் விடுமுறையில் முதல்வரின் செயலாளர் அனுஜார்ஜ் செல்வதால், அவர் இதுநாள் வரை கவனித்து வந்த துறைகளை முதல்வரின் 2 செயலாளர்கள் மற்றும் 1 இணைச் செயலாளர் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
136 நாட்கள் விடுமுறை முடிந்து அவர் பணிக்குத் திரும்பியதும் மீண்டும் முதல்வரின் செயலாளராக அவரை நியமிக்கவும் கோட்டையில் முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். அதனால் தான் கிட்டத்தட்ட நாலரை மாதம் (136 நாட்கள்) நீண்ட விடுமுறையில் அனுஜார்ஜ் சென்றுள்ள நிலையில், அவர் இடத்தில் வேறு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை செயலாளராக நியமிக்கப்படாமல் இருக்கிறது என்கிறார்கள் விபரமறிந்த அதிகாரிகள்.
ஆனால் மற்ற சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டார். ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.
மகேஸ்குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டார். சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டார். ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டார் . மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டார்.
மேற்கு மண்டல ஐஜியாக இருந்த புவனிசுவாய், காவல் தலைமையிட ஐஜியாக நியமனம் செய்யப்பட்டார். தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக மீண்டும் அதிகாரிகளை மாற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். பல மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கான பணிகளை தொடங்கி உள்ளது மாநில தேர்தல் ஆணையம். இந்த மாதமே உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த வருடம் பிப்ரவரிக்குள் தேர்தலை நடத்த தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்படலாம் என்கிறார்கள்.
2024 சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆளும் திமுக இப்போதே செய்ய தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளுக்கு முன்பாக வேகமாக தேர்தல் பணிகளுக்கான காய்களை திமுக நகர்த்தி வருகிறது அதே சமயம் இன்னொரு பக்கம் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை நடத்துவது அல்லது தள்ளிப்போடுவது தொடர்பாக திமுக அரசு இறுதி முடிவு எடுக்காமல் இருக்கிறது. திமுக சீனியர்கள் யாருக்கும் இந்த தேர்தலை நடத்துவதில் விருப்பமில்லை. தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தலை நடத்த ஆளும் திமுக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் வகையில் வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019ல் 27 மாவட்டங்களில் தேர்தல் நடந்தது. தேர்வான நபர்களின் பதவி காலம் வரும் டிசம்பருடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில்தான் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாக அதிகாரிகள் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.