"Miss u All" நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியதாக தகவல்..

post-img

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவர் எழுதி வைத்த தற்கொலை கடிதம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்தவர். இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், சவுண்ட் என்ஜினியர், பாடலாசிரியர் என்ற பன்முகங்களை பெற்றுள்ளார். காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார் விஜய் ஆண்டனி.


இதேபோல் விஜய் ஆண்டனி காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி நடித்த நான், பிச்சைக்காரன் ஆகிய படங்கள் அவருக்கு பெரும் பெயரை பெற்றுக் கொடுத்தது. விஜய் ஆண்டனி கடந்த 2006ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வருகிறார். இவர்களுக்கு மீரா, லாரா ஆகிய இருமகள்கள் உள்ளனர். இதில் மூத்தவர் மீரா, இளையவர் லாரா.
விஜய் ஆண்டனி ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தற்போது ரத்தம் எனும் படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று இரவு தூங்க சென்ற நிலையில் அவருடைய தந்தை அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியதை வீட்டு பணியாளர் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

இதையடுத்து மீராவை அருகில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடலை போலீசார் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். பிரதே பரிசோதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.
மீராவுக்கு கடந்த சில தினங்களாக மன அழுத்தம் இருந்து வந்ததாகவும் அதற்காக அவர் சிசிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மீரா இந்த விபரீத முடிவை ஏன் எடுத்தார் என தெரியவில்லை. விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டது திரையுலகினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இன்று காலை முதலே முன்னணி நடிகர்கள், நடிகைகள், பலரும் விஜய் ஆண்டனி வீட்டிற்கு வந்து அவரது மகள் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு விஜய் ஆண்டனிக்கு ஆறுதலையும் கூறி வருகின்றனர். இதனிடையே, தற்கொலை கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 வரிகள் கொண்ட அந்த கடிதத்தில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா, மிகவும் உருக்கமாக எழுதியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
love you all miss u all என தொடங்கி 10 வரிகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், எனது நண்பர்களையும் ஆசிரியர்களையும் மிஸ் செய்வேன். நான் இல்லாமல் எனது குடும்பம் தவிக்கும்" என நெஞ்சை உருக்கும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Post