விஜய்யின் அடுத்த அரசியல் மூவ்? - விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த அதிரடி!

post-img

நடிகர் விஜய் இதுவரை அரசியலில் ஈடுபடபோவதாக அறிவிக்கவில்லை.  ஆனால் வதனது விஜய் மக்கள் இயக்கத்தை அவர் பலப்படுத்திவருவதால் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காகவே அவர் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக  கருத்துகள் பரவிவருகின்றன.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 8.55 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்க உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத் தலைவரும், தகவல் தொழில்நுட்ப அணியில் இருந்து 3 நிர்வாகிகளை அழைத்து வர வேண்டும். இந்த கூட்டத்தில் மக்கள் இயக்க மகளிர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி, விவசாய அணி உள்ளிட 10 அணிகள் மற்றும் விஜய் மக்கள் மன்றத்தின் நகர, ஒன்றிய அமைப்புகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post