கௌதம் அதானி சொன்னதை செய்துவிட்டார்.. முதலீட்டாளர்கள் ரியாக்ஷன் என்ன..?

post-img

ஹிண்டன்பர்க் ரிசர்ச் வைத்த முக்கிய குற்றச்சாட்டான அதிகப்படியான கடன் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் களத்தில் இறங்கினார் கௌதம் அதானி. இதன் அடிப்படையில் பெரும் தொகையை முன்கூட்டியே செலுத்தி குழுமத்தின் நிதிநிலையை மேம்படுத்த முடிவு செய்தது.

இதன் அடிப்படையில் அதானி குரூப் தனது நிதிநிலை புத்தகத்தில் சுமார் 2.65 பில்லியன் டாலர் மதிப்பிலான கடனை குறைத்துள்ளது. அதானி குழுமம் கடந்த 5 மாதத்தில் பங்குகளை அடமானமாக வைத்து வாங்கிய கடன்கள் மற்றும் பணமாக வாங்கிய கடனில் சுமார் 2.65 பில்லியன் டாலரை தெலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அதானி குழுமத்தின் EBITDA-வுக்கு எதிரான மொத்த கடன் அளவு 2.81 மடங்காக உள்ளது என இக்குழுமத்தின் கடன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் சிறப்பான பணப்புழக்க அளவீடுகள், மூலதன ஆதாயங்களை ஈட்டுதல் என அனைத்து விதத்திலும், அனைத்து நிறுவனத்திலும் நிதியியல் அளவில் மேம்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.

Adani Green Energy FY20 results: Net loss narrows to Rs 68 crore ...

மார்ச் 31 ஆம் தேதி செலுத்தி வேண்டிய கடனுக்கான தவணைகளை மார்ச் 12 ஆம் தேதி அதானி குழுமம் செலுத்தியுள்ளது. அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தை கைப்பற்ற வாங்கிய கடனில் சுமார் 700 மில்லியன் டாலர் தொகையை முன்கூட்டியே செலுத்தியுள்ளது. இதேபோல் கடனுக்கான வட்டியை சுமார் 203 மில்லியன் டாலரை அதானி குழுமம் முன்கூட்டியே செலுத்தியுள்ளது.

இதன் மூலம் அதானி குழுமத்தின் மொத்த கடனுக்கும் அதன் இயக்கத்திற்குமான வித்தியாசம் கடந்த இரு நிதியாண்டில் 3.81 மடங்கில் இருந்து 3.27 மடங்காக குறைந்துள்ளது. மேலும் அதானி குழுமத்தின் கேஷ் பேலென்ஸ் 4.75 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் அடுத்த 3 நிதியாண்டுகளில் அதானி குழுமம் செலுத்த வேண்டிய தொகை, 2024 ஆம் நிதியாண்டில் 11,796 கோடி ரூபாய், 2025 ஆம் நிதியாண்டில் 32,373 கோடி ரூபாய், 2026 ஆம் நிதியாண்டில் 16,614 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும பங்குகளின் நிலவரம் என்ன?

அதானி எண்டர்பிரைசஸ் - 0.31 சதவீதம் உயர்வு

அதானி போர்ட்ஸ் - 0.85 சதவீதம் உயர்வு

அதானி பவர் - 0.12 சதவீதம் உயர்வு

அதானி டிரான்ஸ்மிஷன் - 1.28 சதவீதம் சரிவு

அதானி கிரீன் எனர்ஜி - 0.13 சதவீதம் உயர்வு

அதானி டோட்டல் கேஸ் - 0.07 சதவீதம் சரிவு

அதானி வில்மார் - 0.58 சதவீதம் சரிவு

ஏசிசி லிமிடெட் - 2.21 சதவீதம் உயர்வு

அம்புஜா சிமெண்ட்ஸ் - 3.97 சதவீதம் உயர்வு

NDTV - 1.49 சதவீதம் சரிவு 00:09 / 00:18

இதன் மூலம் இன்று கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 425 மில்லியன் டாலர் அதிகரித்து 52.9 பில்லியன் டாலராக உள்ளது. இதேபோல் ஐக்கிய அரபு நாடுகளில் இருக்கும் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியின் சொத்து மதிப்பு 409 மில்லியன் டாலர் அதிகரித்து 12.8 பில்லியன் டாலராக உள்ளது.


Related Post