கஜகஸ்தான் விபத்துக்கு முன்னே விமானத்தில் நடந்தது என்ன? வெளியான திடுக் தகவல்கள்

post-img
அக்தா: கஜகஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமனாம் பொத்தென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்ததால் அந்த வினாமத்தில் பயணித்த 42 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து விமான பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விபத்துக்கு முன்னே விமானத்தில் நடந்தது என்ன? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாக்கு. இன்று காலை பாக்குவில் இருந்து அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று ரஷ்யாவுக்கு புறப்பட்டது. ரஷ்யாவின் குரோசனிக்கு பயணிகளுடன் இன்று காலை விமானம் புறப்பட்டது. விமானத்தில் பயணிகள் 67 பேரும், விமானி, ஊழியர்கள் என 5 பேரும் பயணம் செய்துள்ளனர். விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில், விமானத்தில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இந்த விமானம் அவசர அவசரமாக கஜகஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விழுந்து நொறுங்கிய விமானம்: அதன்படி அந்த கஜகஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, தரையில் பொத்தென விழுந்தது. இதனால் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. விமானம் தரையில் விழுந்த அடுத்த நொடியே மளமளவென தீப்பற்றி எரிந்தது. விமானம் விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக மீட்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். விமானத்தில் 72 பேர் பயணித்த நிலையில், தற்போது 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜர்பைஜானை சேர்ந்த 37 பேர், ரஷ்யாவை சேர்ந்த 10 பேர் மற்றும் கஜகஸ்தானை சேர்ந்த 6, கிர்கிஸ்தானை சேர்ந்த 3 பேர் உள்பட 67 பயணிகள் பயணம் செய்துள்ளனர். எப்படி விபத்து நேரிட்டது? விமானம் கஜகஸ்தான் எல்லைப்பகுதியில் பறந்துகொண்டிருந்த போது விமான நிலைய கட்டுபாட்டு அறைக்கு விமானி பேசியுள்ளார். அப்போது விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டும் எனக் கூறி விமானி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகே விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டும் என்று விமானி சமிக்ஞை அனுப்பட்டதாகவும், ஆனால் விமான நிலையத்தில் இருந்து என்ன முடிவு எடுக்கப்பட்டது என்றும், அந்த முடிவானது விமானியை சென்றடைந்ததா என்றும் தெரியவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அடாகுவில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் விமானம் அவசரமாக தரையிறங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக விமானம் விபத்துக்குள்ளாகும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. அந்த வீடியோவில், வானில் பறந்துகொண்டிருக்கும் விமானம் தரையிறங்குகிறது. அப்போது கீழே இருந்து குப்பென கரும்புகையுடன் தீ பரவி எரியும் வீடியோ பதிவாகி இருந்து. இந்த வீடியோ இணையத்தில் பரவி விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post