சென்னை: சென்னையில் உள்ள மிகப்பெரிய டோல் கேட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2 பணிகள் நடந்து வருவதால், பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி சாலையில் உள்ள நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியை மூடுவதற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் மாநில அரசிடம் பரிந்துரை செய்துள்ளது. சுங்கச்சாவடியில் பயனர் கட்டணம் வசூலிப்பதை நிறுத்துங்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது..
டோல் பிளாசாவில் பயனர் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த உள்ளூர் குடியிருப்போர் சங்கங்கள் பல கோரிக்கை வைத்தன. இங்கே பயணம் செய்யும் மக்கள் பலரும் பல காலமாக இதே கோரிக்கையை வைத்தனர். அவர்களின் கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டு உள்ளது. ஆனால் மெட்ரோ பணிகள் முடிந்து 1 - 2 வருடம் கழித்து மீண்டும் இங்கே டோல் பிளாசா திறக்கப்பட வாய்ப்புள்ளது.
மெட்ரோ: சுங்கச்சாவடியை மூடுவதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். உரிய அனுமதி கிடைத்தவுடன் மூடப்படும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் 2024 வருடம் திறக்கப்பட உள்ள புதிய மெட்ரோ ரூட் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி கோடம்பாக்கத்தில் உள்ள பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 16 கி.மீ., லைன் கட்டுமானப் பணிகள் 2024-ம் ஆண்டு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயணிகள் 2025 ஜனவரி அல்லது பிப்ரவரியில் இருந்து கோடம்பாக்கத்திலிருந்து பூந்தமல்லிக்கு மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும்.
டோல் கட்டணம் வசூல் செய்வது மட்டுமே குறி.. சாலை மிக மோசம்.. சுங்கச்சாவடி வழக்கில் ஐகோர்ட் விளாசல்!
இந்த பாதையில் உள்ள 18 நிலையங்களில் 13 ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கான்கோர்ஸ் மற்றும் டிக்கெட் கவுண்டர் அமைப்பதில் பணியாளர்கள் மும்முரமாக உள்ளனர். கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 26 கிமீ மெட்ரோவின் ஒரு பகுதியாக இந்த 16 கிமீ மெட்ரோ ரூட் உள்ளது. 116.1 கிமீ தூரத்திற்கு வர இருக்கும் கட்டம்-2 திட்டம் இரண்டு கட்டங்களாக 2025 மற்றும் 2028 க்கு இடையில் கட்டங்களில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மெட்ரோ நிலையங்களை அமைக்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. பவர் ஹவுஸ், வடபழனி, சாலி கிராமம், அவிச்சி பள்ளி, ஆழ்வார்திருநகர், வளர்சவாக்கம், காரப்பாக்கம், ஆலப்பாக்கம், போரூர், சென்னை பைபாஸ், ராமச்சந்திரா ஹாஸ்ப்பிட்டல், ஐய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான் சாவடி, முள்ளைத்தோட்டம், பூந்தமல்லி பஸ் டெர்மினல் வரை, பூந்தமல்லி பைபாஸ் வரை இந்த ரூட் அமைக்கப்பட உள்ளது.
பணிகள் தொடங்கியது; இந்த நிலையில்தான் சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2 பணிகள் நடந்து வருவதால், பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி சாலையில் உள்ள நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியை மூடுவதற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் மாநில அரசிடம் பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கனவே பெருங்குடி, தொரைப்பாக்கம், மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை மற்றும் ECR- OMR இணைப்புச் சாலை ஆகிய இடங்களில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகள் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆகஸ்ட் 2021 இல் மூடப்பட்டன. தற்போது நாவலூர் பிளாசா மூடப்படுகிறது. இதனால் தினமும் 7 லட்சம் வரை ஒரு நாளுக்கு இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.