சுக்கிரன் பெயர்ச்சி: 2025 புத்தாண்டில் சுக்கிர பகவான் தன்னுடைய ராசியை மாற்றுவதால் மாளவ்ய ராஜயோகம் ஏற்படப் போகிறது. புத்தாண்டில் மாளவ்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்கார்ரகள் யார், என்னவிதமான நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்... (Sukkiran peyarchi 2025)
2024 ஆம் ஆண்டு விரைவில் நிறைவடையப் போகிறது. மாற்றம் ஒன்றே மாறாதது. புதிய நம்பிக்கைகளுடன் 2025 புத்தாண்டு பிறக்க உள்ளது. சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சி அடைகிறார். மே 14 ம் தேதி குரு பகவான் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்கு மாறுகிறார். மே 18 ஆம் தேதி ராகு - கேது இடமாற்றமும் நிகழ்கிறது. எந்த ஆண்டிலும் இல்லாத சிறப்பாக இந்த 3 அரிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தப் போகிறது. (New year rasi palan)
கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய ராசியை மாற்றும் என்று வேதங்கள் கூறுகின்றன. இதுபோன்ற கிரகங்களின் இடமாற்றத்தின்போது பல்வேறு யோகங்கள் உண்டாகும். லட்சுமி நாராயண ராஜயோகம், பத்ரா ராஜயோகம், ஹம்ச ராஜயோகம், சச மகாபுருச ராஜயோகம், மாளவ்ய ராஜயோகம் என ஐந்து வகையான ராஜயோகங்கள் ஏற்படும்.
இந்த ராஜ யோகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாளவ்ய ராஜயோகம் கருதப்படுகிறது. சுக்கிர பகவான் தான் மாளவ்ய ராஜயோகத்தை ஏற்படுத்துகிறார். சகலவிதமான செல்வங்களுக்கும், செழிப்புக்கும் உரித்தானவர் சுக்கிர பகவான். சுக்கிரன் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சி அடைவதால் மாளவ்ய ராஜயோகம் உண்டாகிறது.
தற்போது சுக்கிரன் மீன ராசிக்குள் நுழைவதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த மாளவ்ய ராஜயோகத்தால் 2025 புத்தாண்டில் மூன்று ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தையும், மாற்றத்தையும் பெறவுள்ளனர். எந்தெந்த ராசிக்காரர்கள் மாளவ்ய ராஜயோகத்தால் சகல செல்வ செழிப்புடன் ராஜ வாழ்க்கை வாழப் போகிறார்கள். எந்தவிதமான நற்பலன்களைப் பெறப் போகின்றனர் என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்..
ரிஷபம் (New year rasi palan for rishabam): ரிஷப ராசிக்காரர்கள் மாளவ்ய ராஜயோகத்தால் பல வழிகளில் வரும் பணத்தால் திளைக்கப் போகிறீர்கள். புதிய வருமானங்கள் உண்டாகும். பொருளாதார சூழ்நிலை மேம்படும். வீடு, கார் போன்றவை வாங்குவதற்கான யோகங்கள் ஏற்படும். சேமிப்பு, முதலீடுகள் பெருகும். கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ராஜயோகம் காரணமாக பண வரவுக்கு பஞ்சம் இருக்காது. அனைத்து சுபகாரியங்களும் வீட்டில் நடைபெறும்.
தனுசு (New year rasi palan for dhanusu): சுக்கிரனின் ராசி மாற்றம் காரணமாக ஏற்படும் மாளவ்ய யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகிறது. அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். கடந்த காலங்களில் ஏற்பட்டு வந்த பணப் பிரச்னைகள் நீங்கும். பண வரவு முன்பை விட அதிகரிக்கும். சொத்துகளை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். முதலீடு, சேமிப்பு செய்வது குறித்து சிந்தித்து முடிவெடுப்பீர்கள்.
கும்பம் (New year rasi palan for kumbam): மாளவ்ய ராஜயோகத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு இனி வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தைக் காண்பீர்கள். புதிய வருமானங்களை உருவாக்குவீர்கள். புதிய வேலைகள், பதவிகள், பொறுப்புகள் வரும். சுக்கிரன் மகர ராசிக்கு ஏழாம் வீட்டில் இருப்பதால் இந்த ராசியினர் வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும்.