மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடந்த சம்பவம் ஒன்று நெகிழ்ச்சியை தந்துள்ளது.. இது தொடர்பான வீடியோக்களும், போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
மயிலாடுதுறை மாவட்டத்தில், கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மொத்தமாக நீரில் மூழ்கிவிட்டன.
தரங்கம்பாடி: இதன் அடிப்படையில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் பாதிக்கப்பட்ட நெற்பயிரிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது... ஆனால், தரங்கம்பாடி, குத்தாலம் தாலுகாவில் உள்ள கடக்கம், அகர ஆதனூர், பெரம்பூர், முத்தூர், அகர வல்லம், கிளியனூர் எடக்குடி, கொடை விளாகம் ஆகிய 8 கிராமங்களுக்கு மட்டும் பயிர் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.
அதனால், நிவாரணம் வழங்க வேண்டும் என்று இங்குள்ள விவசாயிகள் பலமுறை மனு அளித்தனர்.. போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.. இறுதியில், நிவாரணம் வழங்கப்படாத 8 கிராம விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று, மாவட்ட கலெக்டர், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்..
மயிலாடுதுறை: இதன் அடிப்படையில், விடுபட்டு போன மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 8 கிராம விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை மற்றும் உளுந்து பயிர்கள் நிவாரணம் என மொத்தம், 5 கோடி 86 லட்சம் ரூபாய் சமீபத்தில் தமிழக அரசு ஒதுக்கி, அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது. இதனால், ஏகப்பட்ட மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், தமிழக அரசிடமிருந்து நிவாரணத் தொகையை பெற்றுத்தந்த மாவட்ட கலெக்டருக்கு நன்றிகளை தெரிவிக்க முயன்றனர்.
ஆனால், தங்கள் நன்றியை வித்தியாசமாக தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, மேளதாள வாத்தியங்கள் முழங்க சீர்வரிசை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக, கலெக்டர் ஆபீசுக்கு வந்தார்கள்.. அப்போது கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.. கையில் மாலைகளும், முகத்தில் மலர்ச்சியுமாக வந்துநின்ற விவசாயிகளை பார்த்து, மாவட்ட கலெக்டர் மகாபாரதி நெகிழ்ந்து போனார்..
2024 நாடாளுமன்றத் தேர்தல்! திமுகவிடம் மயிலாடுதுறை தொகுதியை எதிர்பார்க்கும் மனிதநேய மக்கள் கட்சி!
கேடயங்கள்: ஆட்சியருக்கு கேடயங்களையும், சால்வைகளையும் அணிவித்து மகிழ்ந்தனர் விவசாயிகள்.. மேலும், தங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும் மாவட்ட கலெக்டர் மகாபாரதிக்கு சிலை வைப்போம் என்றும் பூரித்து சொன்னார்கள்.. அதுமட்டுமல்ல, குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகளையும் வழங்கினர்..
இதில் முக்கியமான ஹைலைட் என்னவென்றால், வெள்ள நிவாரண நிதியாக, ரூ.10 ஆயிரம் ரூபாயை, விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து மாவட்ட கலெக்டரிடம் தந்துவிட்டு போனார்கள்.
Weather Data Source: Wettervorhersage 21 tage