சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்தே இவருடைய வரலாற்றை அதாவது எங்கு படித்தார், எங்கு பிறந்தார், இவருடைய தாய், தந்தை பெயர் என பலவற்றை மக்கள் தோண்டி வந்த நிலையில், அதிகம் மக்கள் தேடியது சுந்தர் பிச்சை சென்னையில் படித்த ஸ்கூல் பெயர்.
சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்கப்பட்ட போது பல கல்வி நிறுவனங்கள் சுந்தர் பிச்சை தங்கள் பள்ளியில் படித்தவர் என்று சொந்தம் கொண்டாடினர். இதனால் முதல் பலர் விளம்பரம் தேட நினைத்தாலும் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது.
தமிழரான சுந்தர் பிச்சை கூகுள் சிஇஓ-வாக அறிவிக்கப்பட்ட நாளில் மட்டும் அவருடைய விக்கிபீடியா பக்கத்தில் பள்ளி விபரங்களில் மட்டும் சுமார் 350 திருத்தங்கள் செய்யப்பட்டது. அந்த அளவிற்குத் தமிழ்நாட்டு மக்களும், தமிழகப் பள்ளிகளும் சுந்தர் பிச்சை-யை தனது பள்ளி மாணவர் எனப் பெருமைகொள்ள நினைத்தனர்.
சுந்தர் பிச்சை எந்த கல்லூரியில் பிடித்தார் என்பது குறித்து அவருடைய லின்கிடுஇன் மற்றும் பிற தளத்தில் தெளிவாக இருந்தாலும், பள்ளி கல்வி குறிக்த விபரங்கள் இல்லாதது தான் இந்த பிரச்சனைக்கு முக்கியக் காரணம்.
இந்த நிலையில் ஸ்டான்போர்ட் பிசினஸ் கல்லூரியில் நடந்த இன்டர்வியூவில் சுந்தர் பிச்சையிடம் பள்ளி பற்றி கேட்ட போது, அவரும் சிரித்துக்கொண்டே விக்கிபீடியாவில் வந்த பெயர்களில் இரண்டு பெயர்கள் சரியானவை என்று கூறினார் சுந்தர் பிச்சை. சென்னையில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்குள் அமைந்துள்ள வன வாணி பள்ளியில் தான் பள்ளிக் கல்வியை முடித்ததாகவும் கூறினார்.
சுந்தர் பிச்சையின் உயர் கல்வியைப் பொறுத்த வரையில், காரக்பூரில் உள்ள ஐஐடியில் சேர்ந்து உலோகவியல் பொறியியல் பிரிவில் aபி டெக் பட்டம் பெற்றார்.
இதை தொடர்ந்து சுந்தர் பிச்சை மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் MS படிப்பதற்காக அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், இதன் பின்னர் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் எம்பிஏ படித்துப் பட்டம் பெற்றார்.