வனத்துறை கண்ணில் மண்ணை தூவி 'பலே’ வேலை.. கள்ளக்குறிச்சி அருகே கஞ்சா செடிகள் வளர்த்த 2 பேர் கைது!

post-img
சென்னை: கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலை அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 1,600 கஞ்சா செடிகள் வளர்த்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கிருந்து, சுமார் 104 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது, போலீசார், மது விலக்குப் பிரிவினர் கல்வராயன் மலை பகுதியில் அதிரடி சோதனைகள் நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை கைது செய்தனர். கல்வராயன் மலை பகுதி, சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது. கள்ளச்சாராய ஊறல் போடுவது, விவசாயப் பயிர்களுக்கு மத்தியில் கஞ்சா விளைவிப்பது என அப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் ஏராளமாக நடைபெறும் வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிலையில், கல்வராயன் மலை பகுதியில் கஞ்சா பயிர்களை வளர்த்து வந்த இருவர் சிக்கியுள்ளனர். கல்வராயன் மலை அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 1,600 கஞ்சா செடிகள் வளர்த்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கிருந்து, 104 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வனத்துறைக்கு சொந்தமான இடத்திலேயே கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வராயன் மலை பகுதியில் கஞ்சா பயிர் செய்வதை முற்றிலுமாக தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.

Related Post